Published:Updated:

300 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்!

300 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்!
300 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்!
300 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்!

சென்னை: ஆசிரியர் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கும் 300 என்ஜினீயரிங் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு  அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள் தவிர 520 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் வருடந்தோறும் அங்கீகாரம் பெற வேண்டும். கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆய்வுக்கூடம், எந்திரங்கள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகளை இதற்கான அமைக்கப்பட்டுள்ள குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கும். அதன் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்படும்.

இந்த நிலையில் 5 இடங்களில் செயல்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டதை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஆய்வு மேற்கொண்டன. இதில் சுமார் 300 கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, போதிய எந்திரம் இல்லாதது உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.

##~~##
அதனை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அறிக்கையாக குழு சமர்பித்தது. இதைத் தொடர்ந்து அந்த 300 பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் உங்கள் கல்லூரியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் காளிராஜ்,"சில பொறியியல் கல்லூரிகளில் 90 மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து இருந்த போதிலும், வெறும் 20 மாணவர்கள் மட்டுமே சேர்த்து இருந்ததால் கல்லூரி நிர்வாகம் அந்த 20 மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்களை மட்டும் நியமித்து இருந்தது தெரிய வந்தது. குறைவாக ஆசிரியர்களை நியமித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். பதில் கிடைத்தவுடன் ஆட்சி மன்றத்தில் சமர்பித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.