Published:Updated:

`திருடப்பட்ட எதிர்காலம்’ - பள்ளி செல்லாமல் தவிக்கும் 30 கோடி குழந்தைகள் - ஐ.நா அறிக்கை

`திருடப்பட்ட எதிர்காலம்’ - பள்ளி செல்லாமல் தவிக்கும் 30 கோடி குழந்தைகள் - ஐ.நா அறிக்கை
`திருடப்பட்ட எதிர்காலம்’ - பள்ளி செல்லாமல் தவிக்கும் 30 கோடி குழந்தைகள் - ஐ.நா அறிக்கை

உலகில் உள்ள குழந்தைகளில் 30.3 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் உள்ளதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. 

`திருடப்பட்ட எதிர்காலம்’ - பள்ளி செல்லாமல் தவிக்கும் 30 கோடி குழந்தைகள் - ஐ.நா அறிக்கை

உலகில் உள்ள குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லாமல் உள்ளதாக யுனிசெஃப் அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த புதன் கிழமை நடைபெற்ற ஐ.நாவின் 73-வது பொது சபை கூட்டத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. `திருடப்பட்ட எதிர்காலம்; பள்ளிக்கு வெளியில் இளம் குழந்தைகள்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், உலகளவில் 3 முதல் 17 வயதுடைய குழந்தைகளில் சுமார் 30.3 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகவும் இவர்களில் சுமார் 10 கோடி குழந்தைகள் போர், மோதல் மற்றும் பேரிடர்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் வாழ்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வாழும் குழந்தைகளில் 15 முதல் 17 வயதைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் பள்ளிக்கூடத்தையே பார்க்காதவர்கள் என்றும் இங்கு வாழும் ஐந்தில் இரண்டு குழந்தைகள் ஆரம்பக்கால கல்வியைக்கூட முடிக்காதவர்கள் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

``ஒரு நாடு மோதல் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்படும்போது அங்குள்ள குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒன்று குழந்தைகளின் பள்ளிக்கூடங்கள் அழிக்கப்படுகிறது, இல்லையேல் முகாம்கள் அல்லது ராணுவத்தினர் தங்கும் இடங்களாக மாற்றப்படுகிறது. சில இடங்களில் வேண்டுமென்றே பள்ளிகளின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மேலும், இதுபோன்ற தொடர் சூழ்நிலைகளால் அப்பகுதியில் வறுமை ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது” என யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் ஹென்ரீட்டா தெரிவித்துள்ளார். 

ஒரு நாட்டில் போர், பேரிடர் போன்றவை ஏற்பட்டால் மற்ற நாடுகள் அங்குள்ள குழந்தைகளுக்கு தடையில்லா கல்வி, வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் உலகின் பொருளாதாரம் இன்னும் உயரும் என அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது பற்றி பேசிய யுனிசெஃபின் தலைமை நிர்வாகி, `` வரலாற்றில் மிகவும் நெருக்கடியான நேரம் இது. இது தொடர்பாக உடனடியாக நாம் செயல்பட்டால் அமைதியான, வளமான, திறம்பட செயல்படும் இளைஞர்களை நம்மால் உருவாக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.