Election bannerElection banner
Published:Updated:

நிதிப்பற்றாக்குறையால் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்ட மகாத்மா காந்தி தொடங்கிய பள்ளி!

நிதிப்பற்றாக்குறையால் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்ட மகாத்மா காந்தி தொடங்கிய பள்ளி!
நிதிப்பற்றாக்குறையால் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்ட மகாத்மா காந்தி தொடங்கிய பள்ளி!

நிதிப்பற்றாக்குறையால் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்ட மகாத்மா காந்தி தொடங்கிய பள்ளி!

குஜராத்தில், மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ராஷ்ட்ரிய சாலா பள்ளி தற்போது மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பியபோது, ஆங்கிலேயர்களின் கல்வி நமது நாட்டில் வேர் ஊன்றி அடிமைப்படுத்துவதாகக் கருதினார். அதனால், மாநில மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பள்ளிகள் தொடங்கத் தீர்மானித்தார். அதோடு, நாட்டுக்காகக் குழந்தைகளை தயார்படுத்தும் நோக்கிலும் பள்ளி ஒன்றைத் தொடங்க முடிவுசெய்தார். இதையடுத்து, ராஷ்ட்ரிய சாலா என்ற பள்ளியைத் தொடங்கினார். காந்தியின் சொந்த ஊரான குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த 1921-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. சுதந்தரப் போராட்டத்தின்போது 1939-ம் ஆண்டில் இந்தப் பள்ளியில்தான் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டார் எனக் கூறப்படுகிறது. 

ராஷ்ட்ரிய சாலா மிகவும் பிரபலமான பள்ளியாகத் திகழ்ந்தது. ராஷ்ட்ரிய சாலா அறக்கட்டளை நிர்வகிக்கும் இந்தப் பள்ளியில், 1970-2000 காலகட்டங்களில் 1,000 மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர். ஆனால், தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 37ஆகக் குறைந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை காரணமாக 97 ஆண்டுகள் பழைமையானப் பள்ளியைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையால், ராஷ்ட்ரிய சாலாவில் படித்துவரும் 37 மாணவர்கள் வேறு பள்ளியைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ராஷ்ட்ரிய சாலா அறக்கட்டளை சிறு கையேடு புத்தகம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில், `ராஷ்ட்ரிய சாலா பள்ளியை நடத்த ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை நிதி தேவைப்படுகிறது. அரசிடமிருந்து நிதியைப்பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஆரம்பப் பள்ளி மற்றும் இசைப்பள்ளிக்கு அரசு நிதி இல்லை என்று தெரிவித்துவிட்டனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அவரால் தொடங்கப்பட்ட பள்ளி ஒன்று நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடும் நிலைக்கு வந்துள்ளது. மகாத்மா காந்தியின் நினைவாகவும், 150வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் வகையிலும் ஆல்ஃபிரெட் உயர்நிலைப் பள்ளியில் அருங்காட்சியத்தை பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு