Published:Updated:

டி.என்.பி.எஸ்.சி.யில் மீண்டும் பொதுத் தமிழ்: அரசு ஒப்புதல் கிடைக்குமா?

சென்னை: பழைய முறைப்படி பொதுத்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவர் நவநீத கிருஷ்ணன் கூறினார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக ஆர்.நடராஜ் இருந்த போது, டி.என்.பி.எஸ்.சி தேர்வு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

கடந்த மாதம் அவர் ஓய்வு பெறும் நாளில் புதிய பாடத்திட்டத்தை அவர் வெளியிட்டார். குரூப் 2, வி.ஏ.ஓ ஆகிய தேர்வுகளில் பொதுத்தமிழ் பாடம் அறவே நீக்கப்பட்டது. மற்ற தேர்வுகளில் பொதுத்தமிழுக்கான வினாக்கள் எண்ணிக்கை 100ல் இருந்து 50 ஆக குறைக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

##~~##
இது குறித்து பேரவையில் பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன், ‘‘கிராமப்புற மாணவர்களை பாதிக்காத வகையில் பாடத்திட்டம் வகுக்கப்படும்’’ என்று அறிவித்தார்.
இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவர் நவநீத கிருஷ்ணன் இன்று அளித்த பேட்டியில், ‘‘பழைய முறைப்படி பொதுத்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.