Published:Updated:

`மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுத்தவருக்கு இந்த நிலையா? ’ - சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனரின் மரணம் கொடுத்த அதிர்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர், இன்று அதிகாலை சென்னை மயிலாப்பூரில் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

`மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுத்தவருக்கு இந்த நிலையா? ’ - சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனரின் மரணம் கொடுத்த அதிர்ச்சி

ஐஏஎஸ் பயிற்சி என்றாலே, முன்பெல்லாம் டெல்லிக்குதான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. அதை மாற்றி, சென்னை அண்ணா நகரை ஐஏஎஸ் பயிற்சி மையங்களின் தலைமையிடமாக மாற்றியவர் சங்கர். இதனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநில மாணவர்களும் ஐஏஎஸ் பயிற்சிக்கு சென்னையை நோக்கிப் படையெடுக்கவைத்த பெருமை கல்வியாளர் சங்கரைத்தான் சேரும். இவரின் சொந்த ஊர், திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம். இவர், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு சென்னை  வந்தவர். கனவு முழுமையாக நிறைவேறவில்லை என்பதால், வேறு பாதையைத் தேர்வுசெய்யவில்லை. மாறாகத் தன்னைப்போன்று ஐஏஎஸ் கனவுகளைச் சுமந்த மாணவர்களுக்காக, அண்ணா நகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியை நிறுவினார் சங்கர்.  இந்த மையத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பயிற்சிபெற்றுவருகின்றனர். 

`மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுத்தவருக்கு இந்த நிலையா? ’ - சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனரின் மரணம் கொடுத்த அதிர்ச்சி

சங்கர், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார். நண்பர்களின் தேற்றுதல் பலனளிக்கவில்லை.  சின்னச் சின்ன சறுக்கல்களால் மனமுடைந்துபோன சங்கர், இன்று அதிகாலை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தூக்கில் தொங்கிய நிலையில் சங்கரை மீட்ட குடும்பத்தினர், அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, சங்கரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த தற்கொலைச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

சங்கர் அகாடமியில் படித்த  மாணவ மாணவிகள் பலர், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக நாடு முழுவதும் உள்ளனர். பல மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த சங்கர், மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ’எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர். அவரின் மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்று  பலர் சமூக வலைதளங்களில் தங்களின் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் பதிவுசெய்துவருகின்றனர். ‘இது, தவறான முன்னுதாரணம் ஆகிவிடக் கூடாது. தோல்வியில் துவண்ட பல்வேறு மாணவர்களுக்குத் தன்னம்பிக்கைகொடுத்து, எதிர்கால வாழ்க்கையை உருவாக்கித்தந்த சங்கர், பெருமைக்குரியவர். அவர்போல யாரும் இப்படியொரு முடிவை எடுக்கக் கூடாது’ என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு