பொறியியல் சேர்க்கை விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான குறைந்த பட்ச மதிப்பெண்ணை குறைக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுவை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இன்று தள்ளுபடி செய்தது.
பொறியியல் சேர்க்கையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 50 சதவிகிதம், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 45 சதவிகிதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 40 சதவிகிதம், எஸ்.சி./எஸ்.டி மாணவர்களுக்கு 35 சதவிகிதம் என குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயம் செய்து கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அகில இந்திய பொறியியல் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி டி.இ), பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 45 சதவிகிதமும், இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு 40 சதவிகிதமும் குறைந்த பட்ச மதிப்பெண் இருக்க வேண்டும் என்று அறிவித்தது.
மேலும், 'பொறியியல் சேர்க்கைக்கான மதிப்பெண் நிர்ணயம் அகில இந்திய அளவில் தீர்மானிக்கப்படுவதால் தமிழகத்திற்கு மட்டும் மதிப்பெண்ணை குறைக்க முடியாது. பொறியியல் கல்வியின் தரத்தை உயர்த்த விரும்பினால் இந்த குறைந்த பட்ச மதிப்பெண் அளவை தமிழக அரசு அதிகரிக்கலாம். ஆனால், குறைக்க முடியாது." என்றும் அறிவித்தது ஏ.ஐ.சி.டி.இ. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போதே வழக்குப் பதிவு செய்தது தமிழக அரசு.
##~~## |