Published:Updated:

பகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு! - கோவையில் நடந்த அதிர்ச்சி

கோவை அரசுக் கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடியதற்காக, முதலாம் ஆண்டு மாணவி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

கோவை அரசுக் கலைக் கல்லூரியில் மாலதி என்கின்ற மாணவி முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இதனிடையே, கடந்த மாதம் 28-ம் தேதி கல்லூரி மைதானத்தில் சக மாணவ - மாணவிகளுடன், மாலதி பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடியதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்குக் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, அனுமதி இல்லாமல், கூட்டம் கூடியதாகவும், பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மாணவி மாலதியை, கல்லூரி முதல்வர் சித்ரா சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

``இந்த நிகழ்வில் கல்லூரியிலுள்ள மற்ற மாணவ இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். இதைத்தொடர்ந்து, அன்று மதியமே, அதே மேடையில் கல்லூரியின் அடிப்படை வசதிகளுக்காக மாணவர்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. விடுமுறை முடிந்து கல்லூரி சென்றபோது, வாய் மொழி உத்தரவாகத்தான் சஸ்பெண்டு செய்ததை கூறினர். சில நாள்களுக்குப் பிறகுதான் கடிதம் கிடைத்தது. அன்றைய தினம் மட்டும் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. அதில் எந்தக் கூட்டம் என்பதைக் குறிப்பிடவில்லை. கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும், கல்லூரியிலுள்ள மற்ற மாணவர் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு உரையாற்றிய நிலையில், மாலதியை மட்டும் எதற்காக சஸ்பெண்டு செய்தனர்" என்று அவரது தரப்பில் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக, கல்லூரி முதல்வர் சித்ராவிடம் கேட்டபோது, ``முறையான அனுமதி வாங்காமல் மாணவர்களை ஒன்று திரட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், பகத்சிங் குறித்த உரையாடலின்போது கல்லூரியின் நிறை குறைகள் பற்றியும் பேசியுள்ளனர். இதனால்தான், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.