Published:Updated:

25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை!

25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை!
பிரீமியம் ஸ்டோரி
25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை!

ரோல் மாடல் ராமஜெயம் ஆச்சர்யம்... ஆனால், உண்மைஆ.சாந்தி கணேஷ், படங்கள் : பா.காளிமுத்து

25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை!

ரோல் மாடல் ராமஜெயம் ஆச்சர்யம்... ஆனால், உண்மைஆ.சாந்தி கணேஷ், படங்கள் : பா.காளிமுத்து

Published:Updated:
25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை!
பிரீமியம் ஸ்டோரி
25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை!

மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தாம் ரோல் மாடல்கள். ஆசிரியர் ராமஜெயமோ ஆசிரியர்களுக்கே பல விஷயங்களில் ரோல் மாடலாக அசத்துகிறார்.

‘`நான் ஆங்கில ஆசிரியரா வேலை பார்க்க ஆரம்பிச்சு 28 வருஷங்களாகிடுச்சு. முதல் மூணு வருஷங்களில் நானும் லீவ், பர்மிஷன் எல்லாம் எடுத்துக்கிட்டுதான் இருந்தேன். நாலாவது வருஷம் நான் லீவ், பர்மிஷன்  எதுவும் எடுக்காம ரெகுலரா ஸ்கூலுக்குப் போனது எதேச்சையாகத்தான் நடந்தது. அதுக்காக, நான் வேலைபார்க்கிற சென்னை கே.கே.நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சேர்மன் ராஜகோபாலன்  ஆயிரம் ரூபாய் கேஷ் அவார்டு கொடுத்துப் பாராட்டினார். அப்போதான் என் மனசுக்குள்ள ஒரு ஸ்பார்க்... ‘லீவ் போடாம, லேட் அட்டெண்டன்ஸ் இல்லாம வேலைக்குப்போறது நம்ம கடமைதானே? அதை இனிமே எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது’னு முடிவு செய்தேன்.’’

மகன் குழந்தையா இருக்கும்போதுகூடவா லீவ் எடுக்கிற சூழ்நிலை வரலை..?

‘`வராத அளவுக்கு நான் அவனை ஆரோக்கியமா பார்த்துக்கிட்டேன். காலையில சமைச்சு முடிச்சு, நான் ரெடியாகி, அவனை ரெடியாக்கி, தூக்கிட்டுப் போயி கிரச்ல விட்டுட்டு, காலை 8:20-க்கு அட்டெண்டன்ஸ்ல கையெழுத்து போட்டுடுவேன். அவனுக்குப் பத்து வயசு ஆகிறவரைக்கும் வாழ்க்கை இப்படித்தான் ஓடிச்சு.’’

லீவு போட்டே ஆகவேண்டிய சூழ்நிலை வந்ததா?

‘`ரெண்டு தடவை வந்தது. முதல் தடவை, பிள்ளை அம்மையில துவண்டு கிடக்கிறான். அவனை கிரச்லேயும் விட முடியாது. லீவு எடுக்கவும் மனசு வரலை. ஸ்கூல் கிளம்ப வேண்டிய நேரம் நெருங்க நெருங்க பதற்றமாகி, போன் பண்ணி லீவ் சொல்லிட்டேன். திரும்பிப் பார்த்தால், கடவுள் என் மாமியார் உருவத்துல வந்து நின்னார். 500 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம், தேனியில இருந்தவங்க, எங்களையெல்லாம் பார்க்கணும் போல இருந்துச்சுனு, திடீர்னு சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்து நின்னாங்க. என்னைப் பார்த்து, ‘நீ பள்ளிக்கோடத்துக்கு கெளம்பு’ன்னு சொல்ல, தெருவுக்குக் கிட்டத்தட்ட ஓடிவந்து, ஆட்டோ பிடிச்சு, ஸ்கூலுக்குப் போனேன். பெல் அடிக்க ரெண்டு நிமிஷம் இருக்கிறப்போ அட்டெண்டன்ஸ்ல கையெழுத்து போட்டுட்டேன்!”

25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை!

இரண்டாவது சூழ்நிலை?

‘`கிட்னியில கல் வந்து வலி தாங்க முடியாம அவஸ்தைப்பட்டேன். ஸ்கூல்ல காலாண்டுப் பரீட்சை நடந்துகிட்டு இருந்துச்சு. மாத் திரையைப் போட்டு வலியைத் தாங்கிறதைத் தவிர வேற வழி
யோசிக்கலை. பரீட்சை முடிஞ்சவுடனே அறுவை சிகிச்சைக்காக ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிட்டேன். அதனால, அந்த முறையும் லீவ் போடுறதுலயிருந்து தப்பிச்சுட்டேன்!”

விசேஷங்களுக்குப் போக வேண்டி வந்திருக்குமே..?

‘`வீட்டு விசேஷங்களையெல்லாம் எனக்காக வீக் எண்ட்ல வைக்கிற சுற்றம் கிடைச்சா, நான் எவ்ளோ பாக்கியசாலி?” என்று பரவசத்துடன் கேட்டுவிட்டு, தொடர்கிறார்... ‘`என் நாத்தனார் வீட்டுக் கல்யாணம், காதுக்குத்துன்னு எல்லா விசேஷங்களுக்கும் தேதி குறிக்கிறதுக்கு முன்னாடியே என்கிட்ட, ‘அன் னிக்கு உனக்கு லீவா’னு கேட்டுடுவாங்க. அப்படியே வொர்க்கிங் டேஸ்ல முகூர்த்தம் வைச்சாலும் எனக்காக, 4:30 - 6:00னு அதிகாலை முகூர்த்தமா பார்த்து வைப்பாங்க.ஃப்ரெண்ட்ஸ் கல்யாணம்னா நைட் ரிசப்ஷனுக்குப் போயிடுவேன். அப்படியும் போக முடியலைன்னா, வீக் எண்ட்ல அவங்க வீட்டுக்குப் போய் வாழ்த்திட்டு வந்திடுவேன்...’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை!

நீங்க எடுக்கிற ஆங்கிலப் பாடத்தில் இதுவரை ஒரு ஸ்டூடன்ட்கூட ஃபெயிலானது இல்லையாமே?

‘`ஆமாங்க. வீக்கா இருக்கிற பிள்ளைங்களை ஸ்கூல் முடிஞ்ச துக்கப்புறம் உட்கார வெச்சு, தனித்தனியா கவனம் எடுத்துச் சொல்லிக்கொடுப்பேன். பப்ளிக் எக்ஸாமுக்கு முந்தின நாள் வீக் ஸ்டூடன்ட்ஸ் எல்லாரையும் என் வீட்டுக்கு வரவழைச்சு  படிக்கவைப்பேன். ஸ்டூடன்ட்ஸோட ஃபீஸ்ல இருந்துதானே டீச்சர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறாங்க? அப்ப, எல்லா ஸ்டூடன்ட்ஸையும் நல்லா படிக்கவைச்சு பாஸ் பண்ண வைக்க வேண்டியது டீச்சரின் கடமைதானே?’’

கிடைத்த பாராட்டுகள்..?

‘`பள்ளியிலும் பல அமைப்புகளிலும் தொடர்ந்து அங்கீகாரம் கொடுக்கறாங்க. ஒவ்வொரு வருஷமும், நடிகை லட்சுமி, ஆசிரியர் தினத்தன்று எனக்கு போன் பண்ணி வாழ்த்துவாங்க. அவங்க ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சி பண்ணிட்டு இருந்தப்போ, என்னை ஹானர் பண்றதுக்காக கூப்பிட்டாங்க. ஆனா, ஸ்கூலுக்கு லீவ் போட வேண்டியிருந்ததால்,  நிகழ்ச்சில கலந்துக்க முடியலைன்னு லட்சுமி மேம் கிட்டேயே சொல்லிட்டேன். அதுலயிருந்து ஒவ்வொரு வருஷமும் ஆசிரியர் தினத்தன்று போன் பண்ணிப் பாராட்டிட்டு வர்றாங்க. பலருக்கு உந்துசக்தியாக இருக்கும் என்பதற்காக, கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற என்னைப் பற்றிய தகவல்களை அனுப்பியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக என்கிட்ட படிச்ச பிள்ளைங்க ‘ராமஜெயம் மிஸ்தான் எங்களுடைய சக்சஸுக்குக் காரணம்’னு சோஷியல் மீடியாவில பகிர்ந்திருக்காங்க. இதைவிட வேறென்ன விருது வேணும் எனக்கு?’’ என்கிறவர், வால் கிளாக்கைப் பார்க்கிறார். அவர் பள்ளிக்குக் கிளம்புவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ‘`நன்றி, வாழ்த்துகள்’’ என்கிறார் கைகூப்பி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism