Published:Updated:

ஏன் ‘உயர்கல்வி’ என்கிறோம்?

ஏன் ‘உயர்கல்வி’ என்கிறோம்?
பிரீமியம் ஸ்டோரி
ஏன் ‘உயர்கல்வி’ என்கிறோம்?

சக்தி தமிழ்ச்செல்வன் - படங்கள்: சி.ரவிக்குமார்

ஏன் ‘உயர்கல்வி’ என்கிறோம்?

சக்தி தமிழ்ச்செல்வன் - படங்கள்: சி.ரவிக்குமார்

Published:Updated:
ஏன் ‘உயர்கல்வி’ என்கிறோம்?
பிரீமியம் ஸ்டோரி
ஏன் ‘உயர்கல்வி’ என்கிறோம்?

பிளஸ் டூ முடித்துவிட்டு உயர்கல்வி பயிலவிருக்கும் மாணவர்களுக்காக `விகடன் பிரசுரம்’ மற்றும் ‘பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசெண்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி’ நிறுவனம் இணைந்து நடத்திய ‘விகடன் கல்வி வழிகாட்டி’ நிகழ்ச்சி, சென்னையில் மிகச் சிறப்பாக நடந்தது. 

நிகழ்ச்சியில் முதலில் பேசிய கல்வியாளர் டாக்டர் எஸ்.எஸ்.எம்.அப்துல் மஜீத், ``மாணவர்களுக்கு எந்தப் படிப்பில் ஆர்வம் அதிகமோ, அதைத்தான் தேர்வு செய்ய வேண்டும். அந்தத் துறையில் வேலைவாய்ப்புகள், மேற்படிப்புக்கான வாய்ப்புகள் பற்றி முன்னரே தெரிந்துகொள்வது அவசியம்’’ என்றார். இன்ஜினீயரிங் படிப்பில் பிளாஸ்டிக் டெக்னாலஜி, பாலிமர் டெக்னாலஜி போன்ற தொழில்சார்ந்த துறைகள் குறித்துப் பேசியதோடு, கல்லூரியைத் தேர்வுசெய்வது எப்படி, எந்தப் படிப்பைத் தேர்வுசெய்வது என்பது குறித்தும் உரையாற்றினார். பயோடெக் இன்ஜினீயரிங் பற்றிய தெளிவான புரிதலை, தனது உரையின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படுத்தினார்.

ஏன் ‘உயர்கல்வி’ என்கிறோம்?

``தன்னம்பிக்கை, போராட்டக் குணம், விடாமுயற்சி இந்த மூன்றும் போட்டித் தேர்வாளர்களுக்கு இயல்பாகவே வந்துவிடும். அவை, அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிப்பதற்கும் முக்கியப் பங்கு வகிக்கும்’’ என தன்னம்பிக்கையூட்டும் வகையில் பேசினார் `கிங்ஸ் I.A.S அகாடமி’யின் நிறுவனர் பேராசிரியர் சத்யஸ்ரீ பூமிநாதன். போட்டித்தேர்வுகளுக்குப் படிக்க விரும்புவோருக்கு, எந்தப் படிப்பு பக்கபலமாக இருக்கும் என்பதுகுறித்து தெளிவாக விளக்கினார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுக்குத் தயாராகும் முறையை, அவர் தனது உரையில் விளக்கினார்.

``வேலைக்குப் போவது என்பது சமூகத்துக்குப் பங்காற்றுவது; சேவை செய்வது. அதனால்தான் பிளஸ் டூ முடித்தபிறகான படிப்பை `உயர்கல்வி’ என்கிறோம். அந்த எண்ணம் வருவதற்கு நீங்கள் தேர்வுசெய்யும் துறையில் ஆழமான வாசிப்பு அவசியம்’’  என்றார் பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏன் ‘உயர்கல்வி’ என்கிறோம்?


``எல்லா மாணவர்களும் திறமைசாலிகள்தான். அவர்கள் தங்களுக்கான திறமையைக் கண்டறிந்து அந்தப் படிப்பைத் தேர்வுசெய்ய வேண்டும்’’ என்றார் கல்வியாளர் நெடுஞ்செழியன். ``பெற்றோர்கள், குழந்தைகளிடம் தங்கள் கனவுகளைத் திணிக்கக் கூடாது’’ என அவர் கூற, அரங்கில் இருந்த மாணவர்கள் அனைவரும் பலத்த கைதட்டல்களுடன் அதை ஆமோதித்தனர். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி மையத்தில் படிப்பது குறித்து தெளிவாக உரையாற்றினார் அவர்.

`இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பது எப்படி?’ என்ற கேள்வியை, பல பெற்றோர்களும் மாணவர்களும் எழுப்பினர். அதுகுறித்து அவர் அளித்த விளக்கம், அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. மத்திய அரசின் கல்வி நிலையங்களில் உள்ள வாய்ப்புகள், அதற்கான நுழைவுத்தேர்வுகள், எந்தெந்தப் பிரிவினருக்கு எத்தனை சீட்கள் என விளக்கினார். கலந்தாய்வுக்காகக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அந்த உரை அமைந்தது. டாக்டர் கே.நிலாமுதீன் சட்டம் சார்ந்த படிப்புகள் குறித்து தெளிவான உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருந்தது என்பது குறித்து மாணவர்கள் சிலரிடம் கேட்டோம்.

ஏன் ‘உயர்கல்வி’ என்கிறோம்?

பெரம்பூரைச் சேர்ந்த இந்திரா தியாகராஜன், ``நான் மெடிக்கல் படிக்கலாம்னு ஐடியாவுல இருக்கேன்.  நீட் எக்ஸாம் எழுதியிருக்கேன். ஆனா, எனக்கு அதுல சில குழப்பங்கள் இருந்தன. இங்கே வந்ததுக்கு அப்புறம் மருத்துவத் துறையிலேயே ஏராளமான பிரிவுகள் இருப்பதைத் தெரிஞ்சுக்கிட்டேன்” என்றார்.

சித்தாலப்பாக்கத்திலிருந்து வந்திருந்த சத்தியநாராயணன் என்கிற மாணவர்,

``பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு, ஃபாரின்ல போய்ப் படிக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா, அதுக்கு என்ன பண்றதுனு தெரியலை. இங்கே அவங்க பேசினதைக் கேட்டதும் சில ஐடியாஸ் கிடைச்சிருக்கு. ரொம்ப நம்பிக்கையா இருக்கு’’ என்றார்.

தன் அம்மாவுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பிய இனியா, ``நான் பயோ-மேக்ஸ் படிச்சேன். ஆனா, எனக்கு பயாலஜியில பெரிய இன்ட்ரஸ்ட் இல்லை.

எம்.எஸ்ஸி., டேட்டா சயின்ஸ்ங்கிற கோர்ஸ் பற்றி இப்ப தெரிஞ்சுக்கிட்டேன். அது சென்னை மேத்தமெட்டிக்கல் இன்ஸ்டிட்யூட்ல இருக்கு. அந்த கோர்ஸ் படிக்கணும்னா யூ.ஜி எந்த கோர்ஸ் படிக்கணும்னு சின்ன குழப்பம் இருந்தது. அதைப் பற்றி இங்கே கேட்டப்போ பி.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சா கரெக்டா இருக்கும்னு சொன்னாங்க. ரொம்ப க்ளியர் ஆயிட்டேன்’’ என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்களும் மாணவர்களும் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் நிகழ்ச்சியில் உரையாற்றியவர்களிடம் கேட்டுத் தெளிந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism