மிகக் குறைந்த எண்ணிக்கையில் மாணவர் இருப்பதால் 800-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளைத் தமிழக அரசு மூடப்போகிற என்ற செய்தி பல தரப்பினரையும் கொந்தளிக்க வைத்தது. அதன் பிறகு, பள்ளிகள் மூடப்படாது என அரசுத் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

அரசின் போக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களில் பலர் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த பாராட்டுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

வெற்றிலை பாக்கு... தாம்பூலத்தட்டு!

பெரம்பலூர் மாவட்டம் கொத்தவாசல் கிராமம். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிலர், கையில் வெற்றிலை பாக்குடன் தாம்பூலத்தட்டுடன் ஊருக்குள் வந்தனர். அந்த இடத்தில் இருந்த நாம், “என்ன விஷேசம் சார்?” என்று ஆசிரியர் இளவழகனிடம் கேட்டோம். “பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில மோகத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அவர்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்ற இளவழகன், மேலும் தொடர்ந்தார்.

“எங்கள் பள்ளியில், விவசாயத்தின் அருமை தெரியவேண்டும் என்பதற்காக மாணவர்களைக் கொண்டு இயற்கை முறையில் பள்ளி வளாகத்தில் காய்கறிகளைப் பயிரிடுகிறோம். தொழில்நுட்பம் தெரிந்து கொள்வதற்காக யூடியூப் மூலமாக மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறோம். தனியார் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் யாராவது முடிவு செய்தால், அந்த வீட்டுக்குச் சென்று ‘இவ்வளவு சிறப்பான அரசுப் பள்ளி இருக்கும்போது, எதற்காகத் தனியார் பள்ளிக்கு அனுப்புகிறீர்கள்’ என்று கேட்போம். இதன் விளைவாக, கடந்த ஆண்டு தனியார் பள்ளியில் படித்துவந்த 40 குழந்தைகள், எங்கள் பள்ளியில் சேர்க்க வைத்தோம். இந்த ஆண்டு, கோடை விடுமுறை துவங்கியவுடன் தாம்பூலத் தட்டுடன் வீடு வீடாகச் சென்று, பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று பெற்றோர்களிடம் பேசி வருகிறோம். எங்கள் பள்ளியில் பிள்ளையைச் சேர்ப்பதாக உறுதியளித்த பிறகு, அந்தக் குடும்பத்தினருக்கு ஒரு மரக்கன்று கொடுக்கிறோம். பள்ளிக்கு வரப்போகும் அந்த மாணவன் கையாலேயே மரக்கன்றை நட வைக்கிறோம். மரக்கன்று எப்படி வளர்கிறதோ, அப்படி மாணவனும் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக...” என்றார் உற்சாகத்துடன்.

ஸ்மார்ட் போன் இலவசம்!

``பள்ளியில் சேரும் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோருக்கும் ஒரு ஸ்மார்ட் போன் இலவசம்” என்ற ஆச்சர்ய விளம்பரம் ஒன்றைப் பார்த்தோம். தேனி மாவட்டம் போடியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியின் விளம்பரம் அது. அந்தப் பள்ளிக்குச் சென்றோம். அதன் தலைமையாசிரியர் ஆர்.ஜெயக்குமார், ``1937-ம் ஆண்டு திண்ணை பள்ளிக்கூடமாக இது ஆரம்பிக்கப்பட்டது. என் தாத்தா ஏகாம்பரம், அவரின் நண்பர் பிச்சாண்டி ஆகியோர் இணைந்து இதைத் தொடங்கினர். பின்னர் தொடக்கப் பள்ளியாக மாற்றினர். பள்ளியின் பொறுப்பை என் தந்தையிடம் பிச்சாண்டி ஒப்படைத்துவிட்டார். இப்போது நடுநிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது. தமிழ்வழியில் படிப்பதற்குக் குழந்தைகளைச் சேர்க்கும் ஆர்வத்தைத் தூண்டவே இந்த விளம்பரத்தைச் செய்தோம். பெற்றோர்களுக்கே ஸ்மார்ட் போன் வழங்குகிறோம். குழந்தைகளைப் பற்றிய தகவல்களைப் பெற்றோர்களுடன் பள்ளி நிர்வாகம் பகிர்ந்துகொள்ளவே இந்த ஏற்பாடு” என்றார் பெருமிதத்துடன்.

தங்க நாணயம் பரிசு!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள துலுக்கவிடுதி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் பரிசும் தரப்படும் என்று துலுக்கவிடுதி கிராம மக்கள் அறிவித்துள்ளனர். அந்தப் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் தலைவர் பிரகலாதனிடம் பேசினோம். “எங்கள் ஊரில் அரசுப் பள்ளி தொடங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக முயற்சி செய்தோம். அதன் விளைவாக, 1998-ல் இங்கு அரசுத் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. அரசை எதிர்பார்க்காமல் பள்ளிக்குத் தேவையான வசதிகளை நாங்களே செய்து கொள்கிறோம். எங்கள் ஆர்வத்தையும் பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பதையும் பார்த்த அரசு, இந்தப் பள்ளியை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாக 2003-ம் ஆண்டு தரம் உயர்த்தியது” என மகிழ்ச்சிபொங்கச் சொன்னார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய பிரகலாதன், “பேராவூரணி ஒன்றியத்தில் 105 அரசுப் பள்ளிகள் உள்ளன. வருடம்தோறும் நடத்தப்படும் திறனாய்வுத் தேர்வில் எங்கள் ஊர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்தான் முதலிடம் பிடிக்கின்றனர். கடந்த மாதம் பள்ளி ஆண்டு விழாவுக்கு வந்திருந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ரெங்கநாதனிடம், ‘இதை, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துங்கள்’ என்று கோரிக்கை வைத்தோம். அதற்கு, ‘120 மாணவர்களுக்கு மேல் இருந்தால்தான் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த முடியும்’ என்றார் அவர். எனவே, எங்கள் ஊர் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் பணமும் பரிசாகத் தரப்படும் என ஆண்டு விழா மேடையிலேயே அறிவித்தோம். உடனடியாக 15 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களுக்குத் தங்க நாணயமும் பணமும் கொடுத்தோம்” என்றார் பெருமையுடன்.

டி.வி-யில் விளம்பரம்!

கரூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2018-2019 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சியாக உள்ளூர் டி.வி சேனலில் விளம்பரம் ஒளிபரப்பாகிறது. அந்தப் பள்ளியின் ஆசிரியர் பூபதியிடம் பேசினோம். “இந்தப் பள்ளிக்கு 2016-ல் வேலைக்கு வந்தேன். அப்போது, எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. பெற்றோர் - ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் என எல்லோரையும் அழைத்துப் பேசினேன். முதலில், பள்ளி வளாகம் முழுக்க மரக்கன்றுகள் நட்டோம். மேலும், ஊர் முழுக்க 200 மரக்கன்றுகளை நட்டோம். பிறகு, ஸ்பான்ஸர்கள் பிடித்து, பள்ளியில் பல வசதிகளைச் செய்தோம். கரூர் மாவட்டத்திலேயே குளிர்சாதன வசதியுடன் கூடிய முதல் வகுப்பறை எங்கள் பள்ளியில்தான் உருவாக்கப்பட்டது. ஸ்மார்ட் கிளாஸ் அறையையும் உருவாக்கினோம். மாணவர்களுக்கு இலவசமாக கராத்தே. யோகா போன்றவற்றைக் கற்றுத்தருகிறோம். பள்ளி வளாகம் முழுக்க வைஃபை வசதி ஏற்படுத்தியுள்ளோம். வீடியோ மூலம் பாடங்களை நடத்துகிறோம். இதனால், மாணவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக, என் சொந்தச் செலவில் இந்தப் பள்ளியைப் பற்றி வீடியோ தயாரித்து, அதை லோக்கல் சேனலில் ஒளிப்பரப்பினோம். அதையடுத்து, 25 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்” என்றார் மகிழ்ச்சியுடன்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு சார்பில் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம், “ஒரு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதால், அந்தப் பள்ளியை இன்னொரு பள்ளியுடன் இணைப்பது நியாயமற்ற செயல். இரண்டு பள்ளிகளை இணைப்பது என்றால், ஒரு பள்ளி மூடப்படுகிறது என்று அர்த்தம். அரசுப் பள்ளியை மூடுவது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமான செயல். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் ஆகியோரின் குழந்தைகள் அல்லது பேரக்குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் என்னென்ன வசதிகள் உள்ளனவோ, அவை அனைத்தையும் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் பணியிடங்களையும், அலுவலர்களின் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். கண்ணியத்துடன் ஒரு குழந்தைக்குக் கல்வி கிடைக்க வேண்டும் என்றால், அது அரசு பள்ளியில் மட்டுமே சாத்தியம்” என்றார்.

தமிழக கல்வித்துறைச் செயலாளர் உதயசந்திரனிடம் பேசினோம். “தமிழகத்தில் 3,000 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க ரூ. 60 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் வகுப்புகள் உள்ள பள்ளிகளில், 30 முதல் 50 வரை மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி திட்டமிட்டபடி 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கினால், ஒரு லட்சம் குழந்தைகள் கூடுதலாகச் சேருவார்கள். இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரசின் முயற்சி தவிர, அரசு பள்ளிகளில் பணியாற்றி ஆசிரியர்கள் தன்னார்வத்தின் பேரில், உள்ளூர் அளவில் நிதி திரட்டி ஸ்மார்ட் வகுப்புகளைக் கட்டமைத்து வருகிறார்கள். இதனாலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்றார்.

- கே.பாலசுப்பிரமணி, துரை.வேம்பையன், எம்.கணேஷ், எம்.திலீபன், கே..குணசீலன்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, ம.அரவிந்த்