Published:Updated:

மே 9 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விநியோகம்!

மே 9 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விநியோகம்!
மே 9 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விநியோகம்!
மே 9 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விநியோகம்!

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பல் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 9 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என  மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மே 9ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட இருப்பதாகவும் மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 20ஆம் தேதிக்குகள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக 40,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கலந்தாய்வுக்கான தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகே அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் கூறியுள்ளது.

##~~##
பிளஸ் 2 முடிவுகள் வந்த பிறகே கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்கக வட்டாரம் தெரிவித்துள்ளது.

முன்னதாக விண்ணப்ப விநியோகம் மே 5 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.