Published:Updated:

சாலையில் அனாதையாக கிடந்த பிளஸ் 1 விடைத்தாள்கள்!

சாலையில் அனாதையாக கிடந்த பிளஸ் 1 விடைத்தாள்கள்!
சாலையில் அனாதையாக கிடந்த பிளஸ் 1 விடைத்தாள்கள்!

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சாலையில் அனாதையாக கிடந்த பிளஸ் 1 விடைத்தாள் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தி்ல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தி்ல் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்கள் எரிப்பு, மாயமான சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது, பிளஸ் 1 விடைத்தாள் கட்டிகள் சாலையி்ல் அனாதையாக கிடந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

##~~##
தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி ஜவர்சாமி அருகே  விடைத்தாள் கட்டுகள் சாலைகளில் இன்று காலை அனாதையாக கிடந்துள்ளது. அந்த வழியாக வந்த ரிக் ஷா தொழிலாளி ஒருவர் இந்த விடைத்தாள் கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  அப்போது, மாணவர்கள் விடைத்தாள்கள் என்று அவருக்கு தெரியவந்துள்ளது.
இது குறித்து ரிக் ஷா தொழிலாளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் விடைத்தாள்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சாலைகளில் அனாதையாக கிடந்தது பிளஸ் 1 விடைத்தாள்கள் என்று தெரியவந்தது. இந்த விடைத்தாள்  மன்னார்குடி செயின்ட் ஜோசப் மெட்ரி குலேசன் பள்ளி மாணவர்களின் ஆங்கிலம் தாளும், முத்துப்பேட்டை ராமையா பள்ளி மாணவர்களின் வேதியியல் தாளும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விடைத்தாள்களை கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மன்னார்குடியில் இருந்து திருவாரூர் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றபோது தவறி விழுந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விடைத்தாள்களை கல்வி அலுவலகத்திற்கு கொண்டு செல்வதில் அலட்சியம் காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.