Published:Updated:

மே 9 ஆம் தேதி பிளஸ்-2, மே 31-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

மே 9 ஆம் தேதி பிளஸ்-2, மே 31-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!
மே 9 ஆம் தேதி பிளஸ்-2, மே 31-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 31ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

மே 9 ஆம் தேதி பிளஸ்-2, மே 31-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 27ஆம் தேதி வரை நடந்த இந்தத் தேர்வை, 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர். மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர்.

இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணி அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து, கணினியில் அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களும் பதிவு செய்யும் பணியும் முடிவடைந்துவிட்டது.

இதேபோல், மார்ச் 27ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த  தேர்வை 10.5 லட்சம் மாணவ- மாணவிகள் தேர்வை எழுதினர். இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணியும் தற்போது முடிவடைந்து விட்டது.

##~~##
இதனிடையே, பிளஸ் 2 விடைத்தாள்கள் மாயம், எரிப்பு, 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மாயம் போன்ற  சம்பவங்கள் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஒரு வழியாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது.
இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 31ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தரா தேவி இன்று அறிவித்துள்ளார்.