Published:Updated:

ஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்!

ஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்!
பிரீமியம் ஸ்டோரி
ஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்!

ஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்!

ஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்!

ஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்!

Published:Updated:
ஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்!
பிரீமியம் ஸ்டோரி
ஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்!

“நீட் தேர்வுல பாஸாக முடியாம சில பிள்ளைக இறந்துபோகுதுக... எம் பொண்ணு நீட் தேர்வுல பாஸானதும் சந்தோஷப்பட்டேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துல பல் டாக்டருக்குப் படிக்க இடம் கிடைச்சுது. ஆனா, எங்களால கட்ட முடியாத அளவுக்கு ஃபீஸ் சொன்னாங்க. எம் புள்ள மனமுடைஞ்சு போயிருமோன்ற பயத்துல ராவெல்லாம் தூங்கலை. எம் புள்ளைய பாத்துக் கிட்டே இருந்தேன்” என்று சொல்லும்போதே சரோஜாவின் கண்களில் கண்ணீர் ததும்புகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் இருக்கிறது பட்டன்கோவிலூர். போய்ச்சேருவதற்கு ஒழுங்கான பாதைகூட இல்லாத இந்தக் குக்கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவரின் மகள் சுமித்ரா. நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றதால், இவருக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. தன் கனவு நனவாகப்போகிறது என்ற ஆசையுடன் சென்ற சுமித்ராவுக்குப் பெரும் அதிர்ச்சி. ஓர் ஆண்டுக்கு ஆறு லட்ச ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளனர். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவார் அந்தப் பழங்குடி தந்தை? தந்தையும் மகளும் சோகத்துடன் ஊர் திரும்பினர். இதைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இந்த மாணவியின் மருத்துவப் படிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

ஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்!

கரடுமுரடான பாதையைப் பல சிரமங்களுடன் கடந்து சுமித்ராவின் கிராமத்தை அடைந்தோம். அந்தக் குடும்பத்தில் அத்தனை பேர் முகங்களிலும் அவ்வளவு மகிழ்ச்சி.

“ஃபீஸ் கட்டலாம்னு பாப்பாவைக் கூட்டிட்டு காலேஜுக்குப் போனேன். ஆறு லட்சம் கட்டணும்னு சொன்னாங்க. ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. ஒரு வருஷத்துக்கு ஆறு லட்சம்னா, அஞ்சு வருஷத்துக்கு என்ன பண்றது? டாக்டர் படிப்பெல்லாம் நம் குடும்பத்துக்கு சரிப்பட்டு வராதுன்னு பாப்பாவை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்’’ என்றார் மாணிக்கம். 

“பணம் கட்ட முடியாம ஊருக்குத் திரும்பி வந்தப்ப, ரொம்ப வேதனையா இருந்துச்சு. அப்பாவைக் கடன்காரரா ஆக்கிட்டு டாக்டர் ஆகணுமான்னு எனக்கு நானே சமாதானம் பண்ணிகிட்டேன்.  ஆனாலும், எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு. அழுதா அப்பா மனசு கஷ்டப்படுமேன்னு அழுகையை அடக்கிக்கிட்டு வந்தேன்” என்று சுமித்ரா சொல்ல... மகளை அணைத்துக்கொண்டார் மாணிக்கம்.

தகவல் அறிந்து சுமித்ராவையும், மாணிக்கத்தையும் அழைத்துப் பேசிய ஆட்சியர், ‘பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் பி.டி.எஸ் படிப்பில் சேருங்கள்’ என்று கூறியிருக்கிறார். இருவரின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர். பின்னர், பணம் கட்டக் கல்லூரிக்குச் சென்றபோது, இன்னொரு சோதனை. மாணவர் சேர்க்கைக்கான தேதி முடிந்துவிட்டது. உடனே, மருத்துவ கவுன்சிலுக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் கொடுத்துள்ளார். அதை எடுத்துக்கொண்டு சுமித்ராவும், மாணிக்கமும் சென்னையில் உள்ள மருத்துவ கவுன்சிலுக்குச் சென்றனர். சுமித்ராவுக்கு கல்லூரியில் இடம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்!

மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் பேசினோம். “மருத்துவக் கல்லூரியிலேயே சேர வேண்டாமென அவர்கள் முடிவெடுத்த சமயம்தான், அந்த மாணவியைப் பற்றி எனக்குத் தெரியவந்தது. அப்போது, மாணவர் சேர்க்கைக்கான தேதி முடிந்துவிட்டது. நீட் தேர்வு தோல்வியால் சில மாணவர்கள் மனமுடைந்துபோகும் சூழலில், சுமித்ரா கல்லூரி வரைக்கும்போய் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், அந்தப் படிப்பே வேண்டாமென்று திரும்பிவந்த செய்தி எனக்கு வருத்தமாக இருந்தது. அதுவும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி இவ்வளவு தூரம் படித்து வந்துள்ளார் என்றால், அது சாதாரணமான ஒன்றல்ல. எனவே, இந்த மாணவிக்கான சேர்க்கைத் தேதியை நீட்டிக்கச் சொல்லிப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் தயார் செய்து, மருத்துவ அதிகாரி ஒருவரையும் அவர்களுடன் சென்னைக்கு அனுப்பினேன். சேர்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டது. மாணவி யின் கல்விச் செலவுக்கான நிதியைத் திரட்ட முயற்சி செய்தேன். நிதி தருவதாக பலரும் ஒப்புக்கொண்டதில், ரூ.31 லட்சம் வந்தது. சுமித்ராவுக்கு கட்டணச் சலுகை கிடைத்திருப்பதால், ரூ.17 லட்சமே போதுமானது. அதனால், மீதிப் பணத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டேன். சுமித்ரா பெயரிலும், பல்கலைக்கழகப் பதிவாளர் பெயரிலும் ஜாயின்ட் அக்கவுன்ட் ஆரம்பித்து அதில், இந்தப் பணத்தைப் போடப் போறோம். சுமித்ராவின் கனவை நனவாக்குவதில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

“சுமித்ராவுக்கு டாக்டர் படிப்புக்கு இடம் கிடைச்சிருக்குற மாதிரி, எங்க ஊரு சரிதாவுக்கு கால்நடை மருத்துவப்படிப்புக்கு இடம் கிடைச்சிருக்கு. ஜவ்வாது மலைவாழ் மக்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை சிலம்பி அம்மாதான், எங்க பிள்ளைங்களைப் பெரிய படிப்பெல்லாம் படிக்கணும்னு நம்பிக்கை கொடுக்குறாங்க” என்று பெருமையுடன் சொன்னார்கள் அந்த மலைவாழ் மக்கள்.

கலெக்டருக்கும், தலைமை ஆசிரியருக்கும் ஒரு சல்யூட்!

- தமிழ்ப்பிரபா, படங்கள்: க.முரளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism