Published:Updated:

பிரியாணி விருந்தோடு இலவச ட்யூசன்! - ஆசிரியர் பத்மஸ்ரீ

பிரியாணி விருந்தோடு இலவச ட்யூசன்! - ஆசிரியர் பத்மஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
பிரியாணி விருந்தோடு இலவச ட்யூசன்! - ஆசிரியர் பத்மஸ்ரீ

குருவே வணக்கம்

பிரியாணி விருந்தோடு இலவச ட்யூசன்! - ஆசிரியர் பத்மஸ்ரீ

குருவே வணக்கம்

Published:Updated:
பிரியாணி விருந்தோடு இலவச ட்யூசன்! - ஆசிரியர் பத்மஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
பிரியாணி விருந்தோடு இலவச ட்யூசன்! - ஆசிரியர் பத்மஸ்ரீ

“என்கிட்ட படிக்கிற பசங்க தங்களின் படிப்பிலும் தன்னம்பிக்கையிலும் காட்டும் முன்னேற்றம்தான், அவங்க எனக்குத் தர்ற ஃபீஸ்’’

- நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் ஆசிரியர் பத்மஸ்ரீ. அர்ப்பணிப்புடன் கூடிய சேவையால் கல்விப் பணியை அர்த்தமுள்ளதாக மாற்றும் ஆசிரியர்களின் வரிசையில், பத்மஸ்ரீக்கும் இடமுண்டு. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆசிரியரான
இவர், 10 ஆண்டுகளாகத் தன் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக ட்யூஷன் எடுத்து, அவர்களின் கல்வித்தரத்தை முன்னேற்றியுள்ளார்.

பிரியாணி விருந்தோடு இலவச ட்யூசன்! - ஆசிரியர் பத்மஸ்ரீ

“எனக்கு இந்த ஊர்தான் பூர்வீகம். எங்கப்பா ராஜகோபால், அரசுப் பள்ளி ஆசிரியரா பணியாற்றியவர். அப்போ அவர் வேலைபார்த்த ஸ்கூல்ல நூற்றுக்கும் மேலான மாணவர்கள் படிப்பாங்க. ஆனா, ஓரிரு ஆசிரியர்கள்தான் இருப்பாங்க. அதனால எல்லா மாணவர்களுக்கும் கவனம் கொடுத்து பாடம் நடத்துறதுல அப்பாவுக்குச் சிரமம் இருந்திருக்கு. ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களுக்குப் பெரிசா படிப்பறிவு கிடையாது. தங்கள் பிள்ளைகளை ஓரளவுக்குத்தான் படிக்க வைப்பாங்க; பிறகு வேலைக்கு அனுப்புற பெற்றோர்தான் அதிகம். இந்த நிலையில பசங்களின் கல்வியறிவு உயரணும்னு நினைச்ச எங்கப்பா எங்க வீட்டிலேயே கட்டணம் எதுவும் வாங்காம ட்யூஷன் எடுப்பார். இது அவரின் சர்வீஸ் தொடங்கினது முதல் ரிட்டயர்ட்மென்ட் வரை 34 வருஷங்களும் தொடர்ந்துச்சு.

நானும், என் அண்ணன், தம்பியும் அஞ்சாவது வரை எங்க ஊர்ல, இப்போ நான் வேலைபார்க்கிற பள்ளியில் படிச்சுட்டு, மேல்நிலைக் கல்விக்கு வெளியூர் பள்ளிக் கூடங்களுக்குப் போனோம். லீவ் நாள்கள்ல அப்பாவோடு சேர்ந்து நாங்களும் ட்யூஷன் எடுப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பாவைப் பார்த்துத்தான் நான் டீச்சராக ஆசைப் பட்டேன். திருச்சியில டீச்சர் ட்ரெய்னிங் முடிச்சேன்.

2005-ல் போஸ்ட்டிங் கிடைச்சு, இந்த ஈராசிரியர் பள்ளியில உதவி ஆசிரியரா சேர்ந்தேன். அப்போ 130 குழந்தைங்க படிச்சாங்க. அவங்க அடிப்படை விஷயங்கள்கூட தெரியாம படிப்பில் ரொம்ப பின்தங்கிஇருந்தாங்க. வீட்டுப்பாடம் செய்துட்டு வரமாட்டாங்க. அதையெல்லாம் நினைச்சு நான் வருத்தப்பட்டப்போதான், ‘செயல்தான் முக்கியம். ட்யூஷன் எடு, நல்ல முன்னேற்றம் கிடைக்கும்’னு அப்பா சொன்னார்’’ என்கிற பத்மஸ்ரீ, 2008-ம் ஆண்டு முதல் இன்றுவரை தன் வீட்டில் இலவச ட்யூஷன் எடுத்து வருகிறார்.

“தினமும் ட்யூஷன்ல பிஸ்கட் கொடுத்துட்டு, பாடம் நடத்த ஆரம்பிப்பேன். இங்கேயே ஹோம்வொர்க் பண்ணிடுவாங்க. ஒவ்வொருத் தருக்கும் படிப்பில் இருக்கும் சிரமங்களைத் தெரிஞ்சுகிட்டுச் சரி செய்வேன். பேச்சுத்திறமை, பொது அறிவு உள்ளிட்ட தனித்திறமைகளை வளர்க்கப் பயிற்சி கொடுப்பேன். மாலை 4.45-க்கு தொடங்கி, 6.30 வரை ட்யூஷன். அதுக்கப்புறம் என் குழந்தையை ஹோம்வொர்க் பண்ண வெச்சுட்டு, வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுடுவேன்” என்கிறார் பத்மஸ்ரீ.

தன் பள்ளி மாணவர் களுக்குத் தன் செலவில் ஷூ, சாக்ஸ், டை வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கும் பத்மஸ்ரீ, மாணவர்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் அதிகம் சாப்பிட ஏங்கும் பிரியாணி உணவையும் அவ்வப்போது சமைத்தும் பரிமாறுகிறார்.

“ ‘எங்க பிள்ளைகளுக்கும் ட்யூஷன் எடுங்க, ஃபீஸ்கூட தர்றோம்’னு பெரிய வகுப்பு பிள்ளைகளின் பெற்றோர் பலர் என்கிட்ட கேட்கிறாங்க. பணத்துக்காக இதை நான் செய்யலை. குழந்தைகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமானால், முறையா எல்லோரையும் என்னால் கவனிக்க முடியாது. அதற்கான இடவசதியும் நேரமும் எனக்கில்லை. எங்க அப்பா செய்த சேவையை, நானும் தொடரணும் என்பதுதான் என் ஒரே நோக்கம். நான் ஓய்வுபெறும் காலம் வரை நிச்சயம் என் சேவை தொடரும்’’ என்கிறார் பத்மஸ்ரீ.

அறப்பணி தொடரட் டும்!

கு.ஆனந்தராஜ்

படம் : எஸ்.தேவராஜன்

பிரியாணி விருந்தோடு இலவச ட்யூசன்! - ஆசிரியர் பத்மஸ்ரீ

இப்போது சொல்லப்போவது இந்தியர்களுக்கே உள்ள கெட்ட பழக்கம் என்கிறார்கள். யாராவது வந்து தன் துயரத்தைப் பகிர்ந்தால், `இதென்ன பெரிய விஷயம் எனக்கு இதைவிட கஷ்டமெல்லாம் வந்திருக்கு தெரியுமா?' என்பது. யாராவது தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருத்துவம் பற்றி பேசினால், `இப்படிதான் எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இதே மருந்தைச் சாப்பிட்டு செத்துப்போனார்' என்று பயமுறுத்துவது. மகிழ்ச்சியான செய்தி சொன்னாலோ, `நான் இதெல்லாம் சின்ன வயசிலயே கடந்துட்டேன்' என்று மூக்குடைப்பது. இன்பமோ, துன்பமோ ஒவ்வொரு மனிதனின் உணர்வும் தனித்துவமானது. அதை நம்முடையதோடு ஒப்பீடு செய்வதை போன்ற அபத்தம் வேறில்லைதானே?