Published:Updated:

நிதிக் கல்வி... இளைய தலைமுறையின் உடனடித் தேவை!

நிதிக் கல்வி... இளைய தலைமுறையின் உடனடித் தேவை!
பிரீமியம் ஸ்டோரி
நிதிக் கல்வி... இளைய தலைமுறையின் உடனடித் தேவை!

நிதிக் கல்வி

நிதிக் கல்வி... இளைய தலைமுறையின் உடனடித் தேவை!

நிதிக் கல்வி

Published:Updated:
நிதிக் கல்வி... இளைய தலைமுறையின் உடனடித் தேவை!
பிரீமியம் ஸ்டோரி
நிதிக் கல்வி... இளைய தலைமுறையின் உடனடித் தேவை!

வீட்டில் நம் பெற்றோரும், பள்ளியில் நமது ஆசிரியர்களும், சமூகத்தில் நமது பெரியோர்களும் நமக்கு சொல்லித் தராத ஒரு பாடம் என்றால் அது பணத்தைக் கையாளும் நிதிக் கல்விதான். பல தவறுகளைச் செய்து, சம்பாதித்தையெல்லாம் தொலைத்துக் கற்றுக்கொண்ட அந்தப் பாடத்தை, அடுத்த தலைமுறைக்காவது நாம் அவசியம் கற்றுத் தரவேண்டும்.

சாதி, மதம், அரசியல் எனப் பல விஷயங்களை டீன் ஏஜ் குழந்தைகளிடம் பேசத் தயங்காத பெற்றோர்கூட, பணம் மற்றும் அதைக் கையாளும் விதம் பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. இதற்குக் காரணம், நாமே பணம் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான். 45 வயதில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒரு அப்பாவுக்கு, 15% தள்ளி எடுத்த சீட்டுப் பணத்தை வங்கி எஃப்.டி-யில் போட்டு வைக்கக்கூடாது என்பது தெரியவில்லை. கணவர் தரும் வீட்டுச் செலவில் கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து, குந்துமணி அளவுக்காவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கும் அம்மாவுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை பெரிய லாபம் தந்துவிடவில்லை எனத் தெரியவில்லை. தவிர, தப்பாக எதுவும் சொல்லித் தந்துவிடுவோமோ என்கிற அச்சமும் அவர்களிடம் இருக்கிறது.

நிதிக் கல்வி... இளைய தலைமுறையின் உடனடித் தேவை!

பணத்தை ஒழுங்காகக் கையாளும் விதம், சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசம், பட்ஜெட் போட்டுச் செலவழிக்கும் கலை இவற்றை அறியாவிட்டால், லட்சக் கணக்கில் சம்பாதித்தாலும் பிரயோஜனமில்லை. 

அதிலும் இந்தக் காலத்தில் வேலையில் சேரும்போதே ஐந்து இலக்கச் சம்பளங்களும், பிளாஸ்டிக் மணி எனப்படும் கார்டு களும் வந்தபின், பணத்தின் மீதான மரியாதை குறைந்துள்ளது. நம் காலம் முழுமைக்கும் கொட்டிக் கொண்டிருக்க பணம் ஒன்றும் நயாகரா நீர்வீழ்ச்சி இல்லை; அது வருங்காலத்திலேயே அதைச் சேமிக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வு பல இளைஞர்களுக்கு இல்லை. பணத்தை சரியாகக் கையாளத் தெரியாததாலேயே மன அழுத்தம், விவாகரத்து, குற்றங்கள் பெருகுதல் போன்றவை அதிகரிப்பதாக ஒரு சர்வே கூறுகிறது. ‘‘பேங்க்ல இருந்து பேசுறோம். நீங்க புதுசா ஏ.டி.எம் கார்டு வாங்கியிருக்கீங்க. உங்க கார்டு நம்பரையும், பின்நம்பரையும் கொஞ்சம் சொல்லுங்க’’ என்று சொன்னவுடன் நம்பிச் சொல்லி, பிற்பாடு “பணம் போச்சே, பணம் போச்சே” என்று மெத்தப் படித்தவர்கள்கூட புலம்பக் காரணம், போதிய அளவு நிதிக் கல்வியும், விழிப்பு உணர்வும் இல்லாததுதான்.

இன்ஸ்டன்ட் காபி, டூ மினிட்ஸ் நூடுல்ஸ், ஏ.டி.எம்-மில் பணம், ஆன்லைனில் பொருள்கள் என்று உருவாகும் தலைமுறைக்கு செல்வத்தை உருவாக்க, நம்மிடம் இருக்கும் பணத்தைப் பெருக்க பொறுமையும், அளவற்ற கண்காணிப்பும் எவ்வளவு அவசியம் என்பது இன்றைய தலைமுறைக்குப் புரிவதில்லை. பாட்டி வாங்கிய தங்க நகையை கொள்ளுப் பேத்திக்கு போய்ச் சேருகிற மாதிரி, பாட்டன் வாங்கிய இடம் கொள்ளுப் பேரனுக்குச் சென்று சேருகிறமாதிரி, ஒரு நிறுவனத்தின் பங்கையோ, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டையோ வைத்திருக்க வேண்டும் என்று நம் குழந்தை களுக்கு நாம் என்றைக்காவது சொல்லித் தந்திருக்கிறோமா?

மேலைநாடுகளில் பிள்ளகளுக்கு இந்த நிதி நிர்வாகத்தைக் கற்றுத் தர பல தனியார் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. அமெரிக்காவில் வேன்கார்டு (Vanguard) எனப்படும் மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பள்ளிகளிலேயே செயல்படுத்தும் விதமாக அன்றாடப் பொருளாதாரத்தை வடிவமைத்து, ஆசிரியர்களுக்கும், அவர்கள்மூலம் மாணவர்களுக்கும் கற்றுத் தருகிறது.

நம் நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் இப்படிப்பட்ட முயற்சிகள் இல்லாத நிலையில், பட்ஜெட் போட்டு செலவு செய்வது, அதிகம் கடன் வாங்காமல் இருப்பது, கிரெடிட் கார்டினைக் கையாளுவதில் கவனம் போன்ற நல்ல பழக்கங்களின் அருமையைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

பணம் தொடர்பான விஷயங்கள் குழந்தைகளுக்குப் புரியுமா என்று நாம் சந்தேகப்படத் தேவையில்லை. ஆரம்பக் கல்வியைப் படித்து முடிக்கும்முன்பே பணத்தின் முக்கியத்துவத்தைக் குழந்தைகள் தெளிவாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிடுவதாகச் சொல் கின்றன ஆராய்ச்சிகள். ஐந்து வயதுக் குழந்தைகள்கூட வங்கி, ஏ.டி.எம், டெபிட் கார்டு போன்ற பணம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களை யும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிதிக் கல்வி... இளைய தலைமுறையின் உடனடித் தேவை!

புரிந்துகொள்கிறார்கள். நீங்கள் கற்றுத் தரத்தான் தயாராக வேண்டும்.

பணத்தைப் பற்றி பள்ளி, கல்லூரி களில் பெரிதாக உரை நிகழ்த்தி அவர்கள் மனதில் பதிய வைக்கத் தேவையில்லை. அது அவர்களை வெறுப்படையவே செய்யும். அன்றாட வாழ்வில் நாம் செய்யும் வரவு செலவு விஷயங்களில் அவர் களையும் ஈடுபடுத்துவது ஒரு நல்ல தொடக்கம். ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அவர்களை அருகில் வைத்திருப்பது, வங்கிக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று அங்கு நடக்கும் செயல்பாடு களை விளக்கிச் சொல்வது, கடையில் பொருள்களை வாங்கும்போது, பல விஷயங்களைக் கவனிக்கச் சொல்வது என நமது வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுக்களை அவர்களிடம் எடுத்துச் சொல்வதன்மூலம் அவர்களிடம் ஒரு தெளிவை உருவாக்க முடியும். பள்ளி, கல்லூரிகளில் இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் விரிவான செயல்பாடுகள் மூலம் செய்யலாம்.  

மின்சாரம், தண்ணீர், பால், பேப்பர் இவற்றுக் கான பில்களைக் காட்டி விளக்கி, கட்டவேண்டிய தேதியில் நினைவுபடுத்தும்படி பழக்கப்படுத்தப் பட்ட பிள்ளைகள், தம் வாழ்நாள் முழுவதும் கிரெடிட் கார்டு பில்களைச் சரியாகக் கட்டுவார்கள். எது வாங்குவதாக இருந்தாலும், ஒரு பட்ஜெட் தொகையை முன்னதாகவே குறிப்பிட்டுவிட்டால், அவர்கள் அதை மீறு வதில்லை. ஒருபடி மேலே சென்று, “பட்ஜெட்டில் மீதமிருக்கும் தொகை உன் உண்டியலுக்கு” என்று கூறிவிட்டால், அதிகம் செலவு செய்தால் நஷ்டம் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாகப் பதிந்துவிடும். எதிர்காலத்தில் நமது குழந்தைகள் பணம் தொடர்பான விஷயங்களில் கஷ்டப் படாமல் இருக்க வேண்டுமெனில், பின்வரும் பாடங்களை நாம் அவர்களுக்கு அவசியம் சொல்லித் தரவேண்டும்.

பணம் சம்பாதிப்பது அவசியம்; அதை நேர்வழியில் சம்பாதிப்பது இன்னும் அவசியம்.

பணத்தை மதிக்க வேண்டும்; ஆனால், அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

கடன் வாங்கலாம்; ஆனால், கழுத்தை நெரிக்கிற அளவுக்கு வாங்கக் கூடாது.

தேவையானவற்றை உடனே வாங்கு; ஆசை களைத் தள்ளிப் போடு.

பிறருக்கு நிச்சயம் உதவவேண்டும்; ஆனால், அதிலும் நிதானம் வேண்டும்.

இன்றைக்கு நம் குழந்தைகளிடம் பணம் இல்லையென்றால், நாம் தந்து உதவலாம். எதிர் காலத்திலும் அவர்களிடம் பணம் இல்லை என்றால், நம்மால் உதவி செய்துகொண்டே இருக்க முடியாது. பணத்தைக் கையாளும் கல்வியைத் தந்துவிட்டால், அவர்கள் நம்மிட மிருந்து பணத்தை எதிர்பார்க்கமாட்டார்கள்!   

- சுந்தரி ஜகதீசன்

பள்ளிச் சிறார்களுக்கு நிதிப் பாடம்!

சென்னை அண்ணா நகர் கிழக்கில் உள்ள அரசு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நிதிக் கல்வி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறுசேமிப்பின் பயன்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்கிச் சொல்லப்பட்டது. இந்த வகுப்பில் கலந்துகொண்டவர்களுக்கு இன்டெக்ரேட்டட் என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில்  உண்டியல் வழங்கப்பட்டது. அஞ்சல் நிலைய சேமிப்புக் கணக்கு தொடங்கும் விண்ணப்பமும் வழங்கப்பட்டது. தமிழகம் முழுக்க பள்ளிக் குழந்தைகளுக்கு இப்படி நிதிக் கல்வி தரலாமே! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism