Published:Updated:

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது

சென்னை: தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆர்வத்துடன் மாணவர்கள் வந்து விண்ணப்பத்தை வாங்கிச் சென்றனர்.

பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பம் வரும் 20ஆம் தேதி விநியோகிக்கப்படுகின்றன. அதே 20ஆம் தேதிதான் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்.

இந்தாண்டு கூடுதலாக 30ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பொறியியல் விண்ணப்பங்களை பெற 59 சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் 567 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் சுமார் 2 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜூன் 21 ஆம் தேதி தொடங்கும் கலந்தாய்வு ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

##~~##
எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்க 35 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் போதும். ஓசி மாணவர்களுக்கு 50  மதிப்பெண்ணும், பி.சி. மாணவர்களுக்கு 45  மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி பொறியியல் கல்லூரி திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் தெரிவித்துள்ளார்.