Published:Updated:

'மதுரை காமராசர் பல்கலைகழக துணைவேந்தர் பதவி!'- 10பேர் பட்டியலில் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி பெயர்

'மதுரை காமராசர் பல்கலைகழக துணைவேந்தர் பதவி!'- 10பேர் பட்டியலில் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி பெயர்
'மதுரை காமராசர் பல்கலைகழக துணைவேந்தர் பதவி!'- 10பேர் பட்டியலில் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி பெயர்

மதுரை காமராசர் பல்கலைகழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த 196 கல்வியாளர்களில், ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை உட்பட 10  பேர் ஆளுநர் மாளிகை நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

'மதுரை காமராசர் பல்கலைகழக துணைவேந்தர் பதவி!'- 10பேர் பட்டியலில் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி பெயர்

ஊழலும், முறைகேடுகளும், பாலியல் புகார்களுமாக மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வரும் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில், சமீப காலங்களில் பணம் கொடுத்தும், அரசியல் பின்புலத்தாலும் துணைவேந்தர் பொறுப்புக்கு, தகுதி இல்லாத நபர்கள் நியமிக்கப்பட்டு வந்தார்கள். இதனால் ஆசிரியர், மாணவர் போராட்டம், நீதிமன்றத்தில் வழக்கு, அடியாள் வைத்து தாக்குதல்  என்று பல்கலைக்கழகமே சிக்கி சீரழிந்தது. இந்த வருட தொடக்கத்தில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் பல்கலைக்கழகத்தின் பெயர் அடிபட்டு, இங்கு விசாரணையெல்லாம் நடந்தது.

இனி இதுபோல் தகுதியற்ற நபர்கள் பொறுப்புக்கு நியமிக்க கூடாது, பல்கலைக்கழகத்தில் எந்த சர்ச்சையும் எழக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஆளுநர் மாளிகை, சிறந்த கல்வியாளர்களிடம் மட்டும் துணைவேந்தர் தேர்வுக்கான விண்ணப்பங்களை வாங்க உத்தரவிட்டது. இதற்காக நாகேஷ்வர ராவ் என்பவர் தலைமையில் தேடல் குழுவும் அமைக்கப்பட்டது.

இதுவரை 196 கல்வியாளர்கள் விண்ணபித்தனர். இதிலும் சிலர் சிபாரிசாலும், கோடிகளை கொடுத்து  வருவதற்கும் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், தேடல் குழுவோ இந்த 196 பேரில் மிகச்சரியான 10 பேரை தேர்வு செய்துள்ளது.

இவர்களுக்கு வருகின்ற 29 ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் நேர்காணல் நடைபெறும். அதில் தேர்வாகும் மூன்று பேரை ஆளுநரே நேர்காணல் செய்து, அதில் ஒருவரை துணைவேந்தராக அறிவிப்பார். இந்த 10 பேர் பட்டியலில் ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.