Published:Updated:

'முன்கூட்டியே வெளியானதா வினாக்கள்?'- மின்வாரியத் தேர்வில் திடீர் சர்ச்சை

'முன்கூட்டியே வெளியானதா வினாக்கள்?'- மின்வாரியத் தேர்வில் திடீர் சர்ச்சை
'முன்கூட்டியே வெளியானதா வினாக்கள்?'- மின்வாரியத் தேர்வில் திடீர் சர்ச்சை

தமிழ்நாடு மின்வாரிய இளநிலைப் பொறியாளர் பதவிக்கான தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும், முன்கூட்டியே வெளியாகிவிட்டதாகப் பெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது.

'முன்கூட்டியே வெளியானதா வினாக்கள்?'- மின்வாரியத் தேர்வில் திடீர் சர்ச்சை

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் பொறுப்புக்கான தேர்வு, நேற்றைய தினம் நடத்தப்பட்டது. டி.என்.இ.பி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய மாநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், சுமார் 80 ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டு தேர்வு எழுதியிருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்றைய தினம் நடத்தப்பட்ட தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் ஏற்கெனவே சட்டவிரோதமாக வெளியாகியிருப்பதாக, அதுகுறித்த வாட்ஸ்-அப் படங்களுடன் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டுவருகிறது. இதனால், தேர்வில் கலந்துக்கொண்ட பல்லாயிரக்கணக்கானோர் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.

'முன்கூட்டியே வெளியானதா வினாக்கள்?'- மின்வாரியத் தேர்வில் திடீர் சர்ச்சை

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய  தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர் கார்த்திவேல், "சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட சில பாடப் பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தத் தேர்வில் கலந்துகொள்ளலாம். நான், ஈரோட்டில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதினேன்.இந்தத் தேர்வைப் பொறுத்தவரை மொத்தம் 120 வினாக்கள் கேட்கப்படும். 'தேர்வு மையத்தில் கொடுக்கப்படும் அந்த 120 வினாக்கள் அடங்கிய கையேட்டை தேர்வு முடிந்தவுடனேயே திரும்பப் பெற்றுக்கொள்வார்கள்.

இந்த நிலையில், நேற்றைய தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் அதற்கான விடைகளுடன் சேர்த்து ஒரு டைரியில் எழுதப்பட்டிருப்பதுபோன்ற புகைப்படங்கள் வாட்ஸ்-அப்பில் வெளியாகியிருக்கிறது. அது, தற்போது சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது. 2 மணிநேரம் மட்டுமே நடைபெறக்கூடிய ஒரு தேர்வில் கேட்கப்படும் 120 வினாக்களையும், ஒருவரால் தேர்வு மையத்திலேயே மனப்பாடம் செய்துவிட்டு வந்து டைரியில் அப்படியே எழுதிவிட முடியாது. அந்த வகையில், நேற்றைய தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் நிச்சயமாக ஏற்கெனவே வெளியாகி இருக்கவே, வாய்ப்புகள் அதிகம். நேர்மையான முறையில் தேர்வு எழுதி இந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தகுதிவாய்ந்த நபர்கள் எல்லோரும், இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே, அரசு உடனடியாகத் தலையிட்டு விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றார்.