Published:Updated:

``உயிரைக் கொடுத்து உழைப்பேன்” - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்

``உயிரைக் கொடுத்து உழைப்பேன்” - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்
``உயிரைக் கொடுத்து உழைப்பேன்” - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்

``காமராசர் பல்கலைக்கழகத்தை என் உயிரைக் கொடுத்தாவது மீண்டும் முதலிடத்துக்குக் கொண்டு வருவேன்" என்று இன்று பொறுப்பேற்றுக்கொண்ட புதிய துணைவேந்தர் டாக்டர் எம்.கிருஷ்ணன் கூறினார்.

சர்ச்சை மிகுந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த செல்லதுரை உச்ச நீதிமன்றம் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாமல் காலியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் புதிய துணைவேந்தரை நியமிக்க தேடல் குழு நியமிக்கப்பட்டது. 196 பேர் விண்ணப்பித்த நிலையில் கல்வியாளர் எம்.கிருஷ்ணனை நியமித்து உத்தரவிட்டார் தமிழக ஆளுநர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய எம்.கிருஷ்ணன் இன்று காலை துணைவேந்தராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த நான், இங்குள்ள பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பொறுப்பேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. முன்பு இந்தியாவிலேயே சிறந்ததாக விளங்கிய இப்பல்கலைக்கழகம் சமீப காலத்தில் மிகவும் கீழே சென்றுவிட்டது. அதை மீண்டும் முதலிடத்துக்குக் கொண்டு வர உயிரைக் கொடுத்து உழைப்பேன். என்னை இன்டர்வியூ செய்த ஆளுநரும் அந்தக் கருத்தைத் தெரிவித்துதான் தேர்வு செய்தார். இப்பல்கலைக்கழகத்திலுள்ள குறைகள் ஒவ்வொன்றாகச் சரி செய்யப்படும். டிஜிட்டல் நவீனமயமாக்கப்படும். இப்பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும். தேவையற்ற ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும். அங்கீகாரம் பெற்ற படிப்புகள் மட்டுமே நடத்தப்படும். என்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாகவே இருக்கும்" என்றார்.