Published:Updated:

பிளஸ் 2 தேர்வு 10 மணிக்கு வெளியீடு: தேர்வுத்துறை சிறப்பு ஏற்பாடு

பிளஸ் 2 தேர்வு 10 மணிக்கு வெளியீடு: தேர்வுத்துறை சிறப்பு ஏற்பாடு
பிளஸ் 2 தேர்வு 10 மணிக்கு வெளியீடு: தேர்வுத்துறை சிறப்பு ஏற்பாடு
பிளஸ் 2 தேர்வு 10 மணிக்கு வெளியீடு: தேர்வுத்துறை சிறப்பு ஏற்பாடு

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் அறிய தேர்வுத்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற்றது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர். இந்த நிலையில், தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது.

அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தேர்வு முடிவுகளையும், மாநில அளவில் ரேங்க் பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிடுகிறார். காலை 10 மணிக்கு தேர்வு முடிவு வெளியிடப்பட்டதும் அடுத்த சில வினாடிகளில் பின்வரும் 4 இணையதள முகவரிகளில் மாணவ–மாணவிகள் தேர்வு முடிவை பார்த்துக்கொள்ளலாம்.

இணையதளங்கள்

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

மேற்கண்ட இணையதளங்களில் www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரி, ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் டபிள்யூ.ஏ.பி. வசதியுடன் கூடிய செல்போனிலும் தேர்வு முடிவுகளை அறியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவை தெரிந்துகொள்வதற்கு மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணுடன் பிறந்த தேதியையும் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் (நிக் சென்டர்) மற்றும் அனைத்து மாவட்ட, கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இதற்கு TNBOARD என்று குறிப்பிட்டு இடைவெளி விட்டு பின்னர் பதிவு எண்ணையும் அதைத் தொடர்ந்து பிறந்த தேதியையும் (நாள்/மாதம்/ஆண்டு என்ற முறையில்) என்று குறிப்பிட்டு அதை 09282232585 என்ற எண்ணுக்கு செல்போனில் இருந்து எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். தேர்வு முடிவு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும்.

##~~##
காலை 10 மணிக்கு பிறகு எஸ்.எம்.எஸ். சேவை மூலம் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம். காலை 10 மணிக்கு முன்பாக எஸ்.எம்.எஸ். ஏதும் அனுப்ப வேண்டாம் என்று மாணவ–மாணவிகளை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.