Published:Updated:

பின்லாந்து, ஸ்வீடனுக்கு கல்விப்பயணம் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

பின்லாந்து, ஸ்வீடனுக்கு கல்விப்பயணம் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்!
News
பின்லாந்து, ஸ்வீடனுக்கு கல்விப்பயணம் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

பின்லாந்து, ஸ்வீடனுக்கு கல்விப்பயணம் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர் சதீஷ்குமார், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு கல்விப் பயணம் செல்ல தேர்வாகியுள்ளார்.

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் தனித்திறனுடன் சிறந்து விளங்கும் மாணவர்களை மேலை நாடுகளுக்கு கல்விப் பயணம் அழைத்துச்செல்வது வாடிக்கை. அந்த வகையில், தமிழகத்தில் இருந்து 50 மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் தேர்வுசெய்யப்பட்டு, வரும் ஜனவரி 20 முதல் 30-ம் தேதி வரை பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய மேலை நாடுகளுக்கு கல்விப் பயணமாக சுற்றுலா அழைத்துச்செல்லப்பட இருக்கிறார்கள். பின்லாந்து நாட்டில் உள்ள அறிவியல் மையம், பள்ளிகளில் சோதனை முறையில் கற்றல் - கற்பித்தல், ரோபோட்டிக்ஸ் ஆய்வகம், கப்பல் துறைமுகம், தேசிய அருங்காட்சியகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகிய இடங்களைப் பார்வையிடும் பொருட்டு தேர்வுபெற்றுள்ளார்கள்.

இதில், கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் சதீஷ்குமார் என்ற மாணவர், கடந்த 4 ஆண்டுகளாகத் தனது வழிகாட்டி ஆசிரியர் தனபால் வழிகாட்டல் மூலம், பள்ளி இளம் விஞ்ஞானிகள் குழுவில் இணைந்து, சூரிய சக்தியில் இயங்கும் நவீன கழிவறை, நீர்த்தாங்கிகள் செறிவூட்டல், பாதை மாறிய தேனீக்களால் பாதித்த விவசாயம் ஆகிய கண்டுபிடிப்புகளுடன் செய்த ஆய்வுக்கட்டுரைக்காக பள்ளிக் கல்வித்துறை, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, அறிவியல் நகரம், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ஆகிய துறைகளின் கீழ் நடைபெற்ற மாவட்டம், மாநிலம், தென்னிந்திய ,தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்குபெற்று முதல் பரிசாக தங்கப்பதக்கம், கோப்பை, பாராட்டுச்சான்றுகளைப் பெற்றுள்ளார். தனது அறிவியல் கண்டுபிடிப்புமூலம் அறிவியல் கோட்பாடுகளைப் புரிந்து படித்து, 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று,  கல்விப் பயணமாக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் செல்ல தேர்வாகி, தமிழகத்துக்கும் இந்திய தேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் செல்ல தேர்வான மாணவர் சதீஷ்குமார், நேற்று கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தங்கவேலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், வெள்ளியணை கிராம மக்களும் பாராட்டினர். ஏற்கெனவே, கடந்த வருடம் இதே பள்ளியைச் சேர்ந்த ஹரிஹரன் என்கிற மாணவர், இதேபோல தேர்வாகி, ஜப்பான்  சென்று, அங்குள்ள ரோபோ தயாரிக்கும் இடங்கள், விஞ்ஞானக் கூடங்கள், விஞ்ஞானிகள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.