
திண்டுக்கல்: "மருத்துவம் படித்து, எதிர்காலத்தில் மக்களுக்கு மருத்துவச் சேவையாற்றுவேன்" என மாணவர் அபினேஷ் கூறியுள்ளார்.

1200க்கு 1189 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை ஜெயசூர்யா, அபினேஷ் ஆகியோர் பிடித்துள்ளனர். இதில் மாணவன் எஸ்.அபினேஷ், நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர் ஆவார்.
இவர், திண்டுக்கல் குல்லனம் பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை சேகர் மதுரையில் இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். தாயார் லதா புதுக்கோட்டை மாவட்டம் செவல்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மாநிலத்தில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவன் அபினேஷிடம் பேசிய போது, நான் விடுதியில் தான் தங்கி படித்தேன். 10ஆம் வகுப்பிலும் நான் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தேன். தொடர்ந்து எனது ஆசிரியர்கள் கொடுத்த ஆலோசனைகளும், பெற்றோர் கொடுத்த தன்னம்பிக்கையும் எனக்கு இந்த வெற்றியை பெற்று தந்துள்ளது.
##~~## |
படம்: சிவகுமார்