Published:Updated:

கணிதப் பாடத்தில் 2,352 பேர் 200க்கு 200 மதிப்பெண்!

கணிதப் பாடத்தில் 2,352 பேர் 200க்கு 200 மதிப்பெண்!
கணிதப் பாடத்தில் 2,352 பேர் 200க்கு 200 மதிப்பெண்!
கணிதப் பாடத்தில் 2,352 பேர் 200க்கு 200 மதிப்பெண்!

சென்னை: பிளஸ் 2 கணக்கு பாடத்தில் கடந்தாண்டு 2656 பேரும், இந்தாண்டு 2352 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்தாண்டை காட்டிலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 142 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஆனால் இந்தாண்டு  வெறும் 36 பேர் மட்டுமே 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

வேதியியல் பாடத்தில் கடந்த ஆண்டு 144 பேரும், இந்தாண்டு 1499 பேரும், உயிரியியல் பாடத்தில் கடந்தாண்டு 620 பேரும், இந்தாண்டு 682 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தாவரவியல் பாடத்தில் கடந்தாண்டு 6 பேரும், இந்தாண்டு சற்று அதிகரித்து 11 பேர் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

விலங்கியல் பாடத்தில் கடந்தாண்டு 4 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். ஆனால் இந்தாண்டோ யாரும் 200 மதிப்பெண்கள் பெறவில்லை.

##~~##
கணக்கு பாடத்தில் கடந்தாண்டு 2656 பேரும், இந்தாண்டு 2352 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 615 பேரும், இந்தாண்டு 1469 பேரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
வணிகவியல் பாடத்தில் 191 பேரும்,  இந்தாண்டு 1336 பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் கடந்தாண்டு 2518 பேரும், இந்தாண்டு 1815 பேரும் பிசினஸ் கணக்கு பாடத்தில் கடந்தாண்டு 445 பேரும், இந்தாண்டு 430 பேரும் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.