Published:Updated:

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் என்றும் இதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகளும், தேர்வுகால அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் 27–ந் தேதி அன்று மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பித்து தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் அவர்களின் வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்கப்படும்.தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகலுக்கும், மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம். இதற்கு அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) 10–ந் தேதி முதல் 13–ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கு மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக்கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு அவர்களுக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் வருமாறு;

மொழித்தாள் – ரூ.550

ஆங்கிலம் – ரூ.550

இதர பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) – ரூ.275

மறுகூட்டலுக்கான கட்டணம்;

மொழித்தாள், ஆங்கிலம், உயிரியல் (ஒவ்வொன்றுக்கும்) – ரூ.305

ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) – ரூ.205

ஆன்லைனில் டவுன்லோடு செய்யப்பட்ட செலானை பூர்த்தி செய்து குறிப்பிட்ட கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் 14–ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்து அதைப் பெற்ற பின்னரே விரும்பினால் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். கட்டண விவரம் வருமாறு:

மொழித்தாள் – ரூ.1010

ஆங்கிலம் – ரூ.1010

##~~##
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) – ரூ.505
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, டவுன்லோடு செய்த ஒப்புகை சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவர்கள் தங்கள் விடைத்தாளின் நகலினை இணையதளத்தின் மூலம் டவுன்லோடு செய்துகொள்ள முடியும். அதோடு மறுகூட்டல் முடிவுகளையும் அறிந்துகொள்ள இயலும்.
சிறப்பு துணைத்தேர்வு
தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகளும், தேர்வுகால அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என்று வசுந்தராதேவி கூறியுள்ளார்.