Published:Updated:

வேதனையிலும் சாதனை படைத்த மாணவர் ஜெயசூர்யா!

வேதனையிலும் சாதனை படைத்த  மாணவர் ஜெயசூர்யா!
வேதனையிலும் சாதனை படைத்த மாணவர் ஜெயசூர்யா!
வேதனையிலும் சாதனை படைத்த  மாணவர் ஜெயசூர்யா!

சேலம்: காட்டன் மில்லில் ஸ்டோர் கீப்பராக வேலை செய்து வரும் தந்தையின் கால் விபத்தில் பறிபோன வேதனையை சிறு வயதிலேயே பார்த்து வந்த மாணவன் ஜெயசூர்யா, தற்போது பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் 1189 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார் நாமக்கல் மாணவர் ஜெயசூர்யா. அங்குள்ள வித்யவிகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவரான இவர், கடினமான தன் குடும்பச் சூழலையும் தாண்டிதான் இந்த வெற்றியை சாதித்துள்ளார்.

ஜெயசூர்யாவின் தந்தை செந்தில்குமார், நாமக்கல்லில் உள்ள லஷ்மி சரஸ்வதி காட்டன் மில்லில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வருகிறார். ஜெயசூர்யா சிறு வயதாக இருக்கும்போது ஒரு விபத்தில் இவரது ஒரு கால் பறிபோய்விட்டது.

உடனே கால் ஒட்டவைக்கப்பட்டுவிட்டது என்றாலும் கூட, அவரால் முன்புபோல நடமாட முடியவில்லை. குடும்பத்தின் வருமான மீட்டும் நபரான செந்தில்குமார், முடங்கிபோனாலும் கூட தன் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதில் முனைப்போடு இருந்தார். தன் குடும்பத்தின் நிலை அறிந்த ஜெயசூர்யாவும் நன்றாக படித்தார்.

10ஆம் வகுப்பில் இவர் பெற்ற மதிப்பெண்கள் 491. நன்றாக படிக்கும் ஜெயசூர்யாவின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க பணம் எதும் பள்ளி நிர்வாகம் வாங்கவில்லை. இத்தகைய சூழலில்தான் 1189 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தை பெற்றிருக்கிறார் ஜெயசூர்யா.

##~~##
எதிர்காலத்தில் என்ன படிக்க விருப்பம் என்று அவரிடம் கேட்டதற்கு, "ஒரு விபத்தில் என் அப்பாவுக்கு ஒரு கால் துண்டாகிவிட்டது. இப்போதுவரை அதை முழுமையாக சரிசெய்ய முடியவில்லை. அந்த வலியுடனும், வேதனையுடன் என் அப்பா படும் துன்பங்களை நான் சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறேன். அதனால் எதிர்காலத்தில் மருத்துவம் படித்து நல்ல அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை" என்று சொல்லியிருக்கிறார்.
அர்த்தமுள்ள ஆசை!
வி.கே.ரமேஷ்