Published:Updated:

என் சாதனையை அறிய அம்மா இல்லையே - மூன்றாம் இடம் பிடித்த மாணவி வேதனை

என் சாதனையை அறிய அம்மா இல்லையே - மூன்றாம் இடம் பிடித்த மாணவி வேதனை
என் சாதனையை அறிய அம்மா இல்லையே - மூன்றாம் இடம் பிடித்த மாணவி வேதனை
என் சாதனையை அறிய அம்மா இல்லையே - மூன்றாம் இடம் பிடித்த மாணவி வேதனை

மதுரை: தான் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே 3-ம் இடம் பிடித்த செய்தியை கூட கேட்க அம்மா இல்லையே என்ற வேதனையில் உள்ளார் மாணவி ராஜேஸ்வரி.

மதுரை சி.இ.ஓ.ஏ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ராஜேஸ்வரி பிளஸ் 2 தேர்வில் 1187 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 3-ம் இடத்தைப் பிடித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் இந்த வருடம் இவர் தான் நம்பர் ஒன். ராஜேஸ்வரி தமிழ்-194, ஆங்கிலம்-193, வணிகவியல்-200, கணக்குப் பதிவியல்-200, பொருளியல்-200, கணினி அறிவியல்-200 பெற்றுள்ளார்.

ராஜேஸ்வரியின் தந்தை கணேசமூர்த்தி மதுரை பி.எஸ்.என்.எல். அதிகாரியாக பணியாற்றி வி.ஆர்.எஸ். பெற்றவர். தமிழ் ஆசிரியையான ராஜேஸ்வரியின் தாயார் லலிதா கடந்த 4-ம் தேதி மரணமடைந்துவிட்டார்.

சென்னையில் இருந்த ராஜேஸ்வரியை போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநிலத்திலேயே முதலிடம் பிடிக்கணும்னு ஆசைப்பட்டேன் ஆனா, முடியலை. அதனால பிளஸ் 2 தேர்வுக்கு நிறைய ஹார்டு ஒர்க் பண்ணினேன். அதனால 3-வது இடத்தைப் பிடிச்சிருக்கேன்.

எல்லாப் பாடத்துலேயும் 200-க்கு 200 வாங்கியும், மொழிப்பாடங்கள்ல கோட்டைவிட்டுட்டேன். மொழிப்பாடங்களுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருந்தா முதலிடத்தைப் பிடிச்சிருப்பேன்.

##~~##
நான் சாதிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டது எங்க அம்மா தான். அவங்க தான் என்னோட ஊக்க மருந்து. இந்த நல்ல சேதியைக் கேட்க அவங்க இல்லியே என்கிற போது அழுகை அழுகையா வருது என்றார் ராஜேஸ்வரி.
கே.கே.மகேஷ், செ.சல்மான்

படம்: பா.காளிமுத்து