Published:Updated:

கலெக்டராக துடிக்கும் பார்வையற்ற மாணவி

கலெக்டராக துடிக்கும் பார்வையற்ற மாணவி
கலெக்டராக துடிக்கும் பார்வையற்ற மாணவி
கலெக்டராக துடிக்கும் பார்வையற்ற மாணவி

பெரம்பலூர்: பிளஸ் 2 தேர்வில் வரலாறு பாடத்தில் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ள பெரம்பலூரை சேர்ந்த பார்வையற்ற மாணவி கலைமணி, கலெக்டராவதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த வடக்கு பரணம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. தந்தை இறந்துவிட்டார். தாயாரும் பிரிந்து சென்றுவிட, தாத்தா ராஜாங்கத்தின் பராமரிப்பில் உள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் உள்ள அன்னை ஈவா மேரி கோக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.

கலைமணி பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினார். 80 சதவீத பார்வையற்ற இவருக்கு பதிலாக தேர்வு மையத்தில் கல்வித்துறையால் நியமிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கலைவாணி சொல்லச் சொல்ல பதில்களை எழுதினார்.

நேற்று வெளியான தேர்வு முடிவில் கலைமணி வரலாறு பாடத்தில் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் தமிழ்&185, ஆங்கிலம்&179, வரலாறு&200, பொருளியல்&198, வணிகவியல்&200, கணக்குப் பதிவியல்&186 என மொத்தம் 1,148 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

கலைமணியின் சாதனை குறித்து அவரது பள்ளித் தலைமை ஆசிரியர் சுகன்யா கூறுகையில், வகுப்பில் மிகவும் அமைதியான மாணவி கலைமணி. மாற்று திறனாளியான அவர் அதிக நினைவாற்றல் கொண்டவர். அதன் காரணமாக படித்த பாடத்தை நினைவில் வைத்து கொண்டு தனக்காக தேர்வு எழுதிய ஆசிரியரிடம் விடைகளை மிகவும் துல்லியமாக தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்றபடி தேர்வு எழுதிய ஆசிரியரும் ஆர்வம் குறையாமல் உதவியதால் கலைமணி மாநில அளவில் சாதனை படைத்து பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றார்.

##~~##
கலைமணி நம்மிடம் பேசும்போது, எனது வெற்றிக்கு என் பள்ளி ஆசிரியர்களும், பள்ளி முதல்வரும் பெரும் உதவியாக இருந்தனர். நன்றாக படித்து வருங்காலத்தில் கலெக்டராக ஆவதுதான் என் லாட்சியம் என்றார்.
கலைமணியின் வார்த்தைகள் நிஜமாகட்டும்
சி.ஆனந்தகுமார்