Published:Updated:

தேர்வு முடிவு தெரியாமல் கண்ணீருடன் தவிக்கும் மாணவி: கல்வி அதிகாரியின் அலட்சிய பதில்

தேர்வு முடிவு தெரியாமல் கண்ணீருடன் தவிக்கும் மாணவி: கல்வி அதிகாரியின் அலட்சிய பதில்
தேர்வு முடிவு தெரியாமல் கண்ணீருடன் தவிக்கும் மாணவி: கல்வி அதிகாரியின் அலட்சிய பதில்
தேர்வு முடிவு தெரியாமல் கண்ணீருடன் தவிக்கும் மாணவி: கல்வி அதிகாரியின் அலட்சிய பதில்

திண்டுக்கல்: 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி ஒருவரது பெயர் தேர்வு முடிவுகளில் விடுபட்டுள்ளதால், தேர்வு முடிவை தெரிந்து கொள்வதற்காக மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார். "பல லட்சம் பேரு தேர்வு எழுதும் போது இது மாதிரி ஒன்னு ரெண்டு தப்பு நடக்கத்தான் செய்யும்" என்று கல்வித்துறை அதிகாரி அலட்சியத்துடன் பதி்ல் கூறியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே ம.மு.கோவிலூரில் உள்ளது சி.எஸ்.எம்.ஏ மேல்நிலைப்பள்ளி. தாமரைப்பாடி என்ற ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மகள் அமுதா இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வதற்காக பள்ளிக்கு வந்த மாணவிக்கு  ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. தேர்வு முடிவுகள் பட்டியலில் அந்த மாணவியின் பெயரும், தேர்வு எண்ணும் இடம் பெறவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது தந்தையுடன் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டுள்ளார்.

"எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியல" பல லட்சம் பேரு தேர்வு எழுதும் போது இது மாதிரி ஒன்னு ரெண்டு தப்பு நடக்கத்தான் செய்யும். நாளைக்கு வாங்க என்னன்னு  பாக்கலாம்" என்ற அலட்சிய பதிலே கிடைத்திருக்கிறது.

அதைத் தொடந்து, அழுது கொண்டே திரும்பி சென்ற மாணவி அமுதா, இன்றும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தனது முடிவைத் தெரிந்துக் கொள்வதற்காக கண்ணீருடன் காத்திருக்கிறார்.

##~~##
நம்மிடம் பேசிய அமுதாவின் தந்தை பாலசுப்பரமணியன், ‘ என் பொண்ணு நல்லா படிக்குற பொண்ணுங்க. பத்தாவது பரீட்சையிலேயே 450 மார்க்குக்கு மேல எடுத்துச்சு. இப்ப எப்படியும் ஆயிரம் மார்க்குக்கு அதிகமாகத் தான் எடுத்திருக்கும். ரிசல்ட் பாக்க ஆசையா ஸ்கூலுக்கு போனதுக்கு உங்க பொண்ணு பேரே லிஸ்ட்ல இல்லன்னு சொல்லிட்டாங்க. அதே ஸ்கூல்ல தான் படிச்சு, அங்க தான் பரீட்சை எழுதுதிச்சு. ஆனா, பாஸ் பெயில்னு எதுவுமே இல்லாம நம்பரை காணும்னு சொல்றாங்க. சி.இ.ஓ ஆபீசுக்கு வந்து கேட்டதுக்கு இதெல்லாம் சகஜம் தான், நாளைக்கு வந்து பாருங்கன்னு அனுப்பிட்டாங்க. இன்னிக்கு வந்ததுக்கு மெயில்  பாத்துட்டு சொல்றோம்னு சொல்றாங்க. நேத்து இருந்து என் மக சாப்பிடாம அழுதுகிட்டே இருக்கா. யாரோ செஞ்ச தப்புக்கு எம் பொண்ணு கஷ்டப்பட்டுகிட்டு இருக்கு" என்று வேதனையுடன் கூறினார்.
கிணத்தை காணோம்னு வடிவேல் சொன்ன கதையா இருக்கு...
ஆர்.குமரேசன்