Published:Updated:

பிளஸ்-2 தேர்வு முடிவில் பெயர், மார்க் இல்லை: தவிக்கும் தூத்துக்குடி மாணவன்!

பிளஸ்-2 தேர்வு முடிவில் பெயர், மார்க் இல்லை: தவிக்கும் தூத்துக்குடி மாணவன்!
பிளஸ்-2 தேர்வு முடிவில் பெயர், மார்க் இல்லை: தவிக்கும் தூத்துக்குடி மாணவன்!
பிளஸ்-2 தேர்வு முடிவில் பெயர், மார்க் இல்லை: தவிக்கும் தூத்துக்குடி மாணவன்!

தூத்துக்குடி: பிளஸ்-2 தேர்வு முடிவில் தனது பெயர், மதிப்பெண்கள் இடம் பெறாததால் தூத்துக்குடியில் காளீஸ்வரன் என்கிற மாணவன் தவித்து வருகிறார்.

தூத்துக்குடி, டூவிபுரத்தை சேர்ந்தவர் கோமதி. இவரது மகன் காளீஸ்வரன் (17). பி.எம்.சி. மெட்ரிகுலேசன் பள்ளியில் பிளஸ்-2 படித்தார். பிளஸ்-2 தேர்வு எழுதிய இவரது எண்ணிற்கு (078701) மட்டும் முடிவுகள் வரவில்லை. இணையதளத்தில் சோதித்து பார்த்தபோது ‘செக் யுவர் நம்பர் அண்டு டிஒபி நம்பர்’ என சொல்லபட்டதாம். இதனால் பதறிப்போன காளீஸ்வரன், தான் படித்த பள்ளியில் கேட்டிருக்கிறார். ‘சி.இ.ஓ.விடம் விளக்கம் கேளுங்க’ என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரியை குடும்பத்தோடு சென்று பார்த்திருக்கிறார். ‘எதோ டெக்னிக்கல் பிரச்னைபோல, ஒருவார காலம் காத்திருங்க’ என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் பதறிப்போன காளீஸ்வரன் இன்று மாவட்ட கலெக்டரை பார்த்து மனு கொடுத்தார். ‘என்ன என்று பார்க்க சொல்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.

##~~##
கண்கலங்கிய நிலையில் நம்மிடம் பேசினார் காளீஸ்வரன், ‘‘நான் பத்தாம் வகுப்பில் 464 மார்க் எடுத்திருக்கிறேன். பிளஸ்-2வில் எப்படியும் ஆயிரத்து நூறுக்கு மேலே எடுத்திடுவேன்னு நம்பிக்கை இருந்தது. என்னுடைய மார்க்கை பார்க்கனும்னு ஆவலா இருந்தேன். ஆனால் இவங்க இப்படி பண்ணிட்டாங்க. இனிமேலாவது உடனடியாக எனது பிரச்னைக்கு முடிவு எடுப்பார்களோ அல்லது இன்னும் அலைய விடுவார்களோ தெரியலை. லேட்டானால் தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விடுமோன்னு பயமா இருக்கிறது’’ என்றார்.
மாவட்ட கலெக்டரான ஆஷிஷ்குமாரிடம் கேட்டபோது, ‘எதோ டெக்னிக்கல் பிரச்னைதான் காரணம். அது என்னன்னு சீக்கிரமா பார்க்க சொல்லியிருக்கேன். இதேபோல் மேலும் இரண்டு மாணவர்களுக்கும் ரிசல்ட் வரவில்லை என்று சொல்றாங்க. அதையும் பார்ப்போம்’’ என்றார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இப்படித்தான் இருக்கிறது அரசு நிர்வாகங்கள்
-எஸ்.சரவணப்பெருமாள்

படம்: ஏ.சிதம்பரம்