Published:Updated:

பிளஸ் 2 முடிவு தெரியாமல் தவித்த தூத்துக்குடி மாணவன் 1072 மதிப்பெண்

பிளஸ் 2 முடிவு தெரியாமல் தவித்த தூத்துக்குடி மாணவன் 1072 மதிப்பெண்
பிளஸ் 2 முடிவு தெரியாமல் தவித்த தூத்துக்குடி மாணவன் 1072 மதிப்பெண்
பிளஸ் 2 முடிவு தெரியாமல் தவித்த தூத்துக்குடி மாணவன் 1072 மதிப்பெண்

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவு தெரியாமல் தவித்த தூத்துக்குடி மாணவன் காளீசுவரன் 1072 மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் மாணவனும், பெற்றோரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தூத்துக்குடியை சேர்ந்த காளீசுவரன் என்ற மாணவன் பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தார். இவருக்கு தேர்வு முடிவு வெளியிடப்படாமல் இருந்தது.

இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும், மாவட்ட கலெக்டரிடம் தேர்வு முடிவு அறிவிக்க கோரி மனு கொடுத்தார் காளீசுவரன். இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்றிரவு மாணவன் காளீசுவரனின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி மாணவன் காளீஸ்வரன், தமிழ்–183, ஆங்கிலம்–165, இயற்பியல்–172, வேதியியல்–165, கம்ப்யூட்டர் அறிவியல்–198, கணிதம்–189 மொத்தம் 1072 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.

##~~##
இந்த தகவல் பள்ளிக்கூடத்துக்கும், மாணவனுக்கும் இரவோடு இரவாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயகண்ணு தெரிவித்தார்.