Published:Updated:

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் பெறுவதற்கு விண்ணப்பிக்கவும், மறு கூட்டலுக்கு இன்று பிற்பகல் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 9ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும் தேர்வுத்துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்து இருந்தார்.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் விடைத்தாள் நகல் கேட்டும், மறு மதிப்பீடு செய்தும் இணையதளத்தில் (www.dge.tn.inc.in ) விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் ஆகும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரம் தெரியாமல் ஏராளமான மாணவர்கள் டி.பி.ஐ. வளாகத்திற்கு வந்தனர். எனவே மாணவர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் தேதி ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013ஆம் வருடம் மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு () என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 13ஆம் தேதி மாலை 5 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

##~~##
மாணவர்களின் நலன் கருதி இன்று பிற்பகல் 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கு இன்று கடைசி நாள். நேரம் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டது.
ஏற்கனவே விண்ணப்பித்து தாங்கள் விண்ணப்பித்த பாடத்திற்கான 10 இலக்க விண்ணப்ப எண் தெரியாதவர்கள் மீண்டும் www.dge.tn.inc.in  என்ற இணையதளத்தின் மூலமே பெற்றுக்கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.