Published:Updated:

`மரம் வளர்த்தால் 12 மதிப்பெண் தருவோம்!' - மாணவர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த செங்கோட்டையன்

`மரம் வளர்த்தால் 12 மதிப்பெண் தருவோம்!' - மாணவர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த செங்கோட்டையன்
`மரம் வளர்த்தால் 12 மதிப்பெண் தருவோம்!' - மாணவர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த செங்கோட்டையன்

மரம் வளர்த்தால் கூடுதல் மதிப்பெண் வழங்கும் திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் சமீபகாலமாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. பாடத்திட்டத்தில் மாற்றம், ஸ்மார்ட் கல்வித் திட்டம், மாணவர்களின் தனித் திறன்களை ஊக்குவிப்பதில் கவனம் உள்ளிட்டவற்றில் பள்ளிக்கல்வித் துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதேபோல் தேர்வு மதிப்பெண் முறையிலும் மாற்றம் ஏற்கெனவே கொண்டுவரப்பட்டுள்ளது. மரம் வளர்க்கும் மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என ஏற்கெனவே பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பு அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ``மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் இரண்டு மதிப்பெண் வீதம் ஆறு படங்களுக்கு 12 மதிப்பெண் வழங்கப்படும். இந்தத் திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். மாணவர்கள் படிப்பதோடு சேர்த்து மரம் வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதைக் கருத்தில் கொண்டே இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது" என்று பேசினார். மேலும், ``ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வினாத்தாள் வடிவைப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை மாணவர்கள், ஆசிரியர்களுக்குத் தலைமை ஆசிரியர்கள் எடுத்துத் தர வேண்டும். பொறியியல் படிப்பு படித்த 1.68 லட்சம் பேர் தமிழகத்தில் வேலையில்லாமல் உள்ளனர்." எனக் கூறினார்.