Published:Updated:

பி.இ. கலந்தாய்வு ஜுன் 17-ல் தொடக்கம்

பி.இ. கலந்தாய்வு ஜுன் 17-ல் தொடக்கம்
பி.இ. கலந்தாய்வு ஜுன் 17-ல் தொடக்கம்
பி.இ. கலந்தாய்வு ஜுன் 17-ல் தொடக்கம்

சென்னை: பி.இ. என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு வருகிற ஜுன் 17 ஆம் தேதியன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் (பொறுப்பு) காளிராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,"பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க வருகிற 20 ஆம் தேதி கடைசி நாள்.

சிபிஎஸ்இ மாணவர்கள் மே 30 ஆம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்யவேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீடு அடிப்படையில் தரவரிசை பட்டியல் ஜூன் 12 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 

##~~##
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜுன் 20-ந் தேதி நடக்கிறது. '

பொது கலந்தாய்வு ஜூன் 21-ல் தொடங்குகிறது. ஆகஸ்ட் 1 முதல் என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கும்.

இந்த ஆண்டு 11 சுயநிதி கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி புதிதாக உறுப்பு கல்லூரியாக மாற வாய்ப்புள்ளது" என்றார்.