Published:Updated:

சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு!

சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு!
பிரீமியம் ஸ்டோரி
சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு!

சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு!

சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு!

சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு!

Published:Updated:
சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு!
பிரீமியம் ஸ்டோரி
சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு!

ஐ.ஏ.எஸ் கனவை நெஞ்சில் ஏந்தி வலம் வந்துகொண்டிருக்கும் மாணவர்களுக்கு உதவும் விதமாக, விகடன்

சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு!

பிரசுரம் மற்றும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து, ‘நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்’ என்ற இலவசப் பயிற்சி முகாமை மார்ச் 10-ம் தேதி கோவையில் நடத்தின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு!

ரயில்வே டி.ஜி.பி சைலேந்திர பாபு ஐ.பி.எஸ், விகடன் மாணவப் பத்திரிகையாளராக இருந்து   தனது கடின உழைப்பின் மூலம் தற்போது இளம் ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக இருக்கும் பூ.கொ.சரவணன் என்று அனுபவம் மிக்கவர்கள் மேடையை அலங்கரிக்க, நிகழ்ச்சி நடைபெற்ற சித்ரா ஆடிட்டோரியம் நிறைந்து விட்டது.

சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு!

முதலில் பேசிய சைலேந்திர பாபு, “ஐ.ஏ.எஸ் தேர்வு கடினமாக இருக்குமா, எளிதாக இருக்குமா என்று பலரும் கேட்பார்கள். கடினமாகப் பார்த்தால் கடினம். எளிதாகப் பார்த்தால் எளிது. ஆனால், அதன்மீது பேரார்வமும், காதலும் இருக்க வேண்டும். அதேபோல, நோக்கமும் பெரிதாக இருக்க வேண்டும். `நாம் எதற்காக ஐ.ஏ.எஸ் ஆகப்போகிறோம்?’ என்பது மிக முக்கியமான கேள்வி. ‘நீங்கள் எதற்காக ஐ.ஏ.எஸ் ஆக ஆசைப்படுகிறீர்கள்? நாட்டுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று நேர்காணலின்போதும் கேட்பார்கள். அப்போது நாம் சிறந்த பதிலை அளிக்க வேண்டும். பொது அறிவு மிகவும் முக்கியம். அதற்கு தினசரி செய்தித்தாள்களைப் படிக்கவேண்டும். இந்திய அரசியலமைப்பு மற்றும் புவியியல் குறித்துத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். கேள்விகளை நன்கு புரிந்துகொண்டு பதில் அளியுங்கள். வரலாறு குறித்து அறிந்துகொள்வதும் அவசியம். மொழி ஆளுமையையும்  முக்கியத் தகுதியாகப் பார்ப்பார்கள். அதற்கு, ஆங்கிலம் நன்கு தெரிந்திருக்க வேண்டும். தற்போது, நன்கு அறிவுள்ள பிள்ளைகளும் ஆங்கிலத்தில் தடுமாறுவதால் வாய்ப்புகள் பறிபோய்விடுகின்றன. செய்தித் தாள்களைத் தொடர்ந்து படித்தாலே, ஆங்கிலத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். முழு ஈடுபாட்டுடன் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். நம்பிக்கை யுடன் முழு முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்” என்று உறுதியான குரலில் முடித்தார்.

சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு!

அடுத்து பேசிய பூ.கொ.சரவணன், “நம்மால் முடியாது என்ற மனப்பாங்கை விட்டு ஒழித்தால்தான் இதில் வெற்றி பெற முடியும். வெற்றி தோல்வியைச் சிந்திக்காமல் மிகுந்த ஆர்வத்துடன் இதை எதிர்கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை நாம் பார்க்கும் விதம் மிகவும் முக்கியம். குறைந்தபட்சம் ஒரு தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். படிப்படியாக, நமது வாசிப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய சிலபஸ் பற்றித் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். அறிவியல், உலக அமைப்பு குறித்துத் தெரிந்து கொள்ளுங்கள். எதைக் கண்டும் பிரமிக்காமல், அதைப்பற்றித் தெரிந்துகொள்ள அதிக கவனம் செலுத்துங்கள். தேர்வில் எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார்கள் என்ற நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு கேள்விக்கும் நாம் சிறந்த பதிலை அளிப்பதாக நினைத்திருப்போம். ஆனால், அதைவிடச் சிறந்த பதில் அந்தக் கேள்விக்கு இருக்கும். சின்ன சின்ன மதிப்பெண் இடைவெளி, நமக்குப் பெரிய பின்னடைவைக் கொடுக்கும். எனவே, முடிந்த அளவுக்கு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். நாம் சொல்ல வருவதைத் தெளிவாகவும், அழகாகவும் சமர்ப்பிக்க வேண்டும். நேர்காணலில், நம்முடைய ஆளுமைப்பண்பு தொடர்பான கேள்விகள் அதிகம் இருக்கும். ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எழுதிப்பார்க்க வேண்டும். அப்போதுதான், நாம் நினைப்பதை  எழுத முடிகிறதா என்பது தெரியும். இந்த இரண்டு மொழிகளில் கோவையாக இருந்தாலே போதுமானது” என்று தெளிவாக விளக்கினார்.

மாணவர்கள் யாரும் எதிர் பாராத விதமாக, சைலேந்திர பாபுவின் நண்பரும் இந்திய ராணுவத்தின் கடற்படை முன்னாள் லெப்டினென்ட்டுமான ஈசன், ராணுவத்தில் இருக்கும் வாய்ப்புகள் குறித்தும், தன்னுடைய அனுபவம் குறித்தும் பேசி சர்ப்ரைஸ் கொடுத்தார்.

- இரா.குருபிரசாத், ஆயிஷா அஃப்ரா

படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism