Published:Updated:

பொறியியல் விண்ணப்பங்களை பெற ஞாயிறன்று 21 தபால் நிலையங்கள் திறப்பு

பொறியியல் விண்ணப்பங்களை பெற ஞாயிறன்று 21 தபால் நிலையங்கள் திறப்பு
பொறியியல் விண்ணப்பங்களை பெற ஞாயிறன்று 21 தபால் நிலையங்கள் திறப்பு
பொறியியல் விண்ணப்பங்களை பெற ஞாயிறன்று 21 தபால் நிலையங்கள் திறப்பு

மதுரை: வருகின்ற 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறியியல் விண்ணப்பங்களை பெற 21 தலைமை தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை அனுப்ப வருகின்ற 20ஆம் தேதி கடைசி நாளாகும். ஆனால் 19ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வழக்கமாக தபால் நிலையங்கள் செயல்படாது. இதனால் மாணவர்கள் குறித்த நாளில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாமல் சிரமப்படுவார்கள்.

##~~##
இதை கருத்தில் கொண்டு, வருகின்ற 19ஆம் தேதி தபால் துறையின் தெற்கு பகுதியில், திண்டுக்கல், பழனி, நாகர்கோவில், தக்கலை, காரைக்குடி, கோவில்பட்டி, தென்காசி, மதுரை, தல்லாகுளம், ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை, பெரியகுளம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 21 தலைமை தபால் நிலையங்கள் விண்ணப்பங்களை பெற திறக்கப்பட்டிருக்கும்.
இந்த சந்தர்ப்பத்தை பொதுமக்களும், மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு தபால்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.