Published:Updated:

பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம்

பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம்
பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம்
பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம்

சென்னை: பொறியியல் படிப்புக்கான பி.இ. விண்ணப்பங்களை வாங்கவும், சமர்ப்பிக்கவும் இன்று கடைசி நாள் என்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தங்களது விண்ணப்பங்களை சம்ர்ப்பித்து வருகின்றனர்.

உரிய சான்றிதழ்கள் கிடைக்காத மாணவர்கள் கூட விண்ணப்பங்களை முதலில் சமர்ப்பித்துவிட வேண்டும் என்றும், சான்றிதழ் கிடைத்தவுடன் அதில் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழுவுக்கு அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் சென்று சேர்ந்ததா என்பதை மாணவர்கள் www.annauniv.edu/tnea2013 என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

##~~##
ஜூன் 5 ஆம் தேதி ரேன்டம் எண்ணும், ஜூன் 12 ஆம் தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்படும். பொறியியல் படிப்புக்காக தமிழ்நாடு முழுவதும் 59 விநியோக மையங்களில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 3.5% விண்ணப்பங்கள் அதிக அளவில் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.