Published:Updated:

திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய மணமகள்

திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய மணமகள்
திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய மணமகள்

விருதுநகர்: திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுத வந்த மணமளால் தேர்வு மையமே ஆச்சரியதத்தில் ஆழ்ந்தது.

விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தத்தை சேர்ந்தவர் சுப்புராஜ் விவசாயி. இவரது மகள் பாண்டீஸ்வரி 25. பி.காம் முடித்துள்ள பாண்டீஸ்வரி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழி கல்வி மூலமாக எம்.காம் படித்து வந்தார்.

திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய மணமகள்

இவருக்கும் பாலவநத்தத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் பூபதி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. பாலவநத்தத்தில் உள்ள முருகன் கோவிலில் இன்று காலை திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்து. குறித்த நேரத்தில் பூபதி பாண்டீஸ்வரி கழுத்தில்  தாலி கட்டினார்.

பாண்டீஸ்வரிக்கு இன்று விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் எம்.காம். தேர்வு இருந்தது. இதையடுத்து பாண்டீஸ்வரி திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் தேர்வு மையத்திற்கு தனது புது கணவருடன் வந்து தேர்வு எழுதினார்.

இது குறித்து பாண்டீஸ்வரி நம்மிடம் பேசும்போது, எனக்கு படிப்பு மீது அதிக நாட்டம். நான் எழுதிய தேர்வுகளில் இதுவரை எதிலும் தவறியதே இல்லை. பி.காமிலும் சரி எம்.காமிலும் சரி ஒரு தாளில் கூட பெயில் ஆனதில்லை. எங்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். நிச்சய தார்த்தத்தின் போது நான் எம்.காம் படிப்பது எனது கணவருக்கு தெரியாது. திருமண தேதி குறிக்கப்பட்ட பிறகு தான் நான் எம்.காம். படிப்பதை அவரிடம் தெரிவித்தேன்.

##~~##
எனக்கு பெரியவர்கள் குறித்த தேதியில் தேர்வும் சேர்ந்து வந்துவிட்டது. இதை என் கணவரிடம் தெரிவித்ததும் அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். அதேபோல் எங்கள் திருமணம் முடிந்ததும் அவரே என்னை தேர்வு மையத்திற்கு அழைத்து வந்தார். நான் தேர்வு எழுதும் வரை இங்கேயே காத்திருந்து இப்போது வீட்டிற்கு அழைத்து செல்கிறர். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் மிகுந்த மகிழ்ச்சியுடன்.
எம்.கார்த்தி

படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்