Election bannerElection banner
Published:Updated:

தேசிய அறிவியல் தினம் - பரிசுகளை வென்ற போகலூர் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள்

தேசிய அறிவியல் தினம் - பரிசுகளை வென்ற  போகலூர் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள்
தேசிய அறிவியல் தினம் - பரிசுகளை வென்ற போகலூர் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள்

தேசிய அறிவியல் தினம் - பரிசுகளை வென்ற போகலூர் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள்

தேசிய அறிவியல் தினம் அன்று நடந்த போட்டிகளில் வென்ற அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போகலூர் அறிவியல் இயக்கத்தின் சார்பில் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினர்.

சர் சி.வி.ராமன் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்பித்த தினமான பிப்ரவரி 28-ம் தேதி, தேசிய அறிவியல் தினமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு போகலூர் அறிவியல் இயக்கத்தின் சார்பில், ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விநாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற முத்துவயல், காக்கனேந்தல், பொட்டிதட்டி, மென்னந்தி, வீரவனூர், எஸ்.கொடிக்குளம், சத்திரக்குடி, முதலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்குப் போகலூர் வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். 

போகலூர் அறிவியல் இயக்கத் தலைவர் குமரேசன் தலைமையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் திலகராஜ் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். ஜே.எஸ்.கே குழும சேர்மன் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் காந்தி மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர். போட்டி முடிவில் ஆசிரியர் நன்றி கூறினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு