கடந்த 22 ஆண்டுகளாக, பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுகளை அண்ணா பல்கலைக்கழகம்தான் நடத்திவந்தது. சமீபத்தில், பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவர் பதவியை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ராஜினாமா செய்தார். பொறியியல் கலந்தாய்வுக்குழுவில் உயர்கல்வித்துறை செய்த சில மாற்றங்களில் ஏற்பட்ட அதிருப்தியே இதற்குக் காரணமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் என்று தமிழக உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. கடந்த 22 வருடங்களில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாத முதல் கலந்தாய்வு இதுதான்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுகள், கடந்த ஆண்டிலிருந்து ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு கலந்தாய்வை நடத்தவில்லை என்பதால், இதில் புதிய முறைகள் எதுவும் கையாளப்படுமா?

இந்த முறை சான்றிதழ்கள் சரிபார்ப்பது தவிர்த்து, விண்ணப்பிப்பதில் தொடங்கி கலந்தாய்வு வரை அனைத்தும் முழுமையாக ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பிப்பதிலிருந்து கல்லூரியில் சேர்வது வரை பத்துப் படிநிலைகள் உண்டு.

01. விண்ணப்பம் பதிவு செய்தல்.

மாணவர்கள் 02.05.2019 - 31.05.2019 வரை www.tneaonline.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் 42 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தோ, உதவி மையங்களுக்குச் சென்றோ விண்ணப்பிக்கலாம். அதோடு, விண்ணப்ப விவரங்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் உங்களுக்கு, நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். நீங்கள் ஒருமுறை கொடுத்த விவரங்களை மீண்டும் மாற்ற இயலாது, எனவே, ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள். உங்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டைக் கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தடுத்த அனைத்துக்கட்ட நகர்வுகளுக்கும் அவை அத்தியாவசியம்.

02. சமவாய்ப்பு எண்
(Random Number) உருவாக்குதல்.

தகுதிப்பட்டியல் தயாரிக்கும்போது ஏற்படும் சமநிலையைத் தவிர்க்க 03.06.19 அன்று சமவாய்ப்பு எண் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒதுக்கப்படும்.

03. பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்த்தல்.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்த விண்ணப்பப் படிவம், அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தை நேரடியாக அணுக வேண்டும். அங்கு விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள், அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்படும். விண்ணப்பதாரர்கள், தங்களின் உதவி மையத்தை அவரவர் விருப்பப்படி விண்ணப்பிக்கும் பொழுதே தேர்வு செய்து கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்த்தல் 06.06.2019 முதல் 11.06.2019 வரை நடைபெறும்.

04. தரவரிசை உருவாக்குதல்.

சான்றிதழ் சரிபார்த்தபின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் தகுதி மதிப்பெண்களின்படி பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டுக் கலந்தாய்வுச் சுற்றுகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

05. சேர்க்கைக்கான முன்பணம் செலுத்துதல்.

06.விருப்பமான கல்லூரியையும் பாடப்பிரிவையும் தேர்வுசெய்தல்.

விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கான தொகையை (எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி ஆகிய பிரிவினர் - ரூ.1,000, மற்றவர்கள் - ரூ. 5,000) வைப்புத்தொகையாகச் செலுத்தியபின் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை வரிசைப்படி பதிவு செய்யலாம். இதற்காக மூன்று நாள்கள் ஒதுக்கப்படும்.

07. குறிப்பிட்ட நாளில் தற்காலிக
இட ஒதுக்கீடு செய்தல்.

08. இட ஒதுக்கீட்டை உறுதி செய்தல்.

09. இறுதி ஒதுக்கீடு செய்தல்.

10. ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர்தல்.

விண்ணப்பதாரர்கள் அளித்த விருப்ப வரிசை மற்றும் தரவரிசைப்படி தற்காலிக இட ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்ப தாரர்கள் இதைத் தங்களின் Login வாயிலாக அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம். பின்னர் விண்ணப்பதாரர்கள், அளித்த விருப்ப வரிசை மற்றும் தரவரிசை செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டை இரண்டு நாள்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிடில் கொடுக்க ப்பட்ட ஏதேனும் ஒரு விருப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒரு சுற்றில் விண்ணப்பதாரரின் விருப்பத்தைப் பெற்றபின், அவர்கள் அளித்த விருப்ப வரிசை மற்றும் தரவரிசைகளின்படி இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும். இச்சுற்றில் இட ஒதுக்கீடு பெறாத விண்ணப்பதாரர்கள் அடுத்த சுற்றில் முறைப்படி கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவில், கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் சென்று சேர்ந்துவிட வேண்டும்.

இதையும் மறந்துடாதீங்க.

சிறப்புக் கலந்தாய்வுப் பிரிவில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் தொழில்துறைப் படிப்புக்கு கலந்தாய்வு நடத்தப்படும். மேலும், எஸ்.சி.ஏ. (SCA) பிரிவினரின் நிரப்பப்படாத இடங்களுக்காக எஸ்.சி(SC) பிரிவினருக்கு நடத்தப்படும் கலந்தாய்வு மற்றும் துணைக் கலந்தாய்வுகள், நேர்முகக் கலந்தாய்வாகச் சென்னையில் நடைபெறும். இந்தக் கலந்தாய்வுகளின் ஒவ்வொரு கட்ட விவரங்களும், விண்ணப்பதாரருக்குக் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-Mail) மூலம் அனுப்பப்படும்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2019 செயலாளர் முனைவர் T. புருசோத்தமனிடம் இதுகுறித்துப் பேசினோம்.

“மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளத் தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உதவி மையத்திலும் பயிற்சிபெற்ற பேராசிரியர்கள் 15 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். விண்ணப்பிக்கும்போது ஏதாவது தவறுதலாகப் பதிவு செய்திருந்தால், சான்றிதழ் சரிபார்க்கச் செல்லு ம்பொழுது, உதவி மையங்களில் அந்தத் தவற்றைத் திருத்திக்கொள்ள முடியும். அங்கு செல்லும்பொழுது மாணவர்கள் கட்டாயம் தங்களின் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 10, +1, +2 மதிப்பெண் பட்டியல்கள் (Mark Sheets), வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப ப்படிவத்துடன் கட்டாயம் எடுத்துச் செல்லுங்கள்” என்றார்.

அப்புறம் என்ன, அப்ளை பண்ண ரெடி ஆகுங்க!

துரைராஜ் குணசேகரன்,
படங்கள்: பா.காளிமுத்து

அப்வேர்டு மூவ்மென்ட் (Upward-Movement)

நீங்கள் விண்ணப்பிக்கும்பொழுது இந்த விருப்பத்தைக் கட்டாயம் தேர்வு செய்துகொள்ளுங்கள். இதன்மூலம், நீங்கள் தேர்வு செய்த கல்லூரியிலேயே, உங்களுக்குமுன் இடம் கிடைத்த விண்ணப்பதாரர் சேரவில்லை என்றால், அந்த இடம் தகுதி அடிப்படையில் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. சற்றுக் குறைந்த கட் ஆப் மதிப்பெண் கொண்டவர்களும் அப்வேர்டு மூவ்மென்ட்டைத் தேர்வு செய்வதன் மூலம் விரும்பிய கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.