திருச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு தேசியச் சட்டப் பல்கலைக்கழகத்தில், ‘மாணவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில்லை. வட மாநிலப் பேராசிரியர்கள், தமிழக மாணவர்களை பாரபட்ச மாக நடத்துகிறார்கள்’ என்று புகார் வாசிக்கிறார்கள், மாணவர்கள்.

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் இருக்கிறது, தேசியச் சட்டப் பல்கலைக்கழகம். அகில இந்திய அளவிலான சட்டப் பல்கலைக் கழகங்களில் இதுவும் ஒன்று. 2013-ம் ஆண்டில் தேசியச் சட்டப்பள்ளி என்ற பெயரில் தொடங் கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டில், தமிழ்நாடு தேசியச் சட்டப் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிதான் வேந்தர். தமிழகச் சட்ட அமைச்சர் இணைவேந் தர். மேல்நிலை இரண்டாம் ஆண்டுக்கான படிப்பு முடித்ததும், அகில இந்திய அளவில் நடத்தப்படும் ‘கிளாட்’ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் இந்தப் பல்கலைக் கழகத்தில் சேர முடியும். இது, தமிழகத்தில் இருப்பதால், தமிழக மாணவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு உண்டு. இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள், “இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தால் விடுதியில் தங்கித்தான் படிக்க வேண்டும். விடுதியில் தங்கு வதற்கு விருப்பம் இல்லாமல், வெளியே தங்கும் மாணவர்களும் விடுதி மற்றும் சாப்பாடு கட்டணத் தைச் செலுத்தியே ஆக வேண்டும். விடுதியில் தரமில்லாத உணவைத்தான் கொடுக்கிறார்கள். சமையலறையும் சுகாதாரமாக இல்லை. பணத்தைக் கட்டிவிட்டு 15 கிலோ மீட்டர் தூரம் சென்று சாப்பிடும் நிலையில் இருக்கிறோம் நாங்கள். இங்கு படிக்கும் மாணவர்கள் தங்களது குறைகளை வார்டனிடம் முறையிடுவோம். ஒவ்வொரு முறை நாங்கள் முறையிடும் போதும் வார்டன் அவற்றைத் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விடுவார். இதனால், கடுப்பான துணைவேந்தர் வார்டனைப் பணியிலிருந்து நீக்கிவிட்டார்.

இங்கு பணிபுரியும் 30 பேராசிரியர்களில் 10 பேர் மட்டும் தான் நிரந்தரப் பணியாளர்கள். மீதியுள்ளோரில் 13 பேர் தற்போதைய துணைவேந்தரால் நியமனம் செய்யப் பட்டவர்கள். அவர்களில் 11 பேர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அந்த வட மாநிலப் பேராசிரியர்கள், தமிழ் மாணவர்களை ஒருதலைபட்சமாக நடத்துகிறார்கள். தேசியச் சட்டப் பல்கலைக்கழகம் என்பதால், தரமாக இருக்கும் என்று நினைத்துப் பல கனவுகளுடன் படிப்பில் சேர்ந்தோம். ஆனால், இங்கு நூலகத்தில்கூடத் தேவையான அளவு புத்தகங்கள் இல்லை” என்றனர்.

பல்கலைக்கழகப் பணியாளர்கள் சிலரிடம் பேசினோம். “இப்போதிருக்கும் துணைவேந்தர் கமலா சங்கரன், 2016-ம் ஆண்டு இங்கு பதவியேற்றார். இங்கு, பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பதவிகளைத் துணைவேந்தர் திட்டமிட்டே காலியாக வைத்துள்ளார். அதனால், மொத்த அதிகாரமும் அவர் கட்டுப்பாட்டில் உள்ளது.

மொத்தம் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பல்கலைக் கழக வளாகத்தில் கடந்த 2013-ம் ஆண்டில், மாநாட்டு அரங்கம், ஆட்சிக்குழு அலுவலகம், பதிவாளர் அலுவலகம், துணைப் பதிவாளர் அலுவலகம், நிதி அலுவலர் அலுவலகம், தொலைதூரக் கல்வி இயக்குநர் அலுவலகம், மக்கள் தொடர்பு அலுவலகம், வங்கி, அஞ்சலகம், இலவச சட்ட உதவி மையம், தேசிய மாணவர் படை அலுவலகம், தேசியச் சேவைத் திட்ட அலுவலகம் என அனைத்துக் கட்டடங் களும் கட்டப்பட்டன. அனைத்துமே செயல்படாமல்தான் இருக்கின்றன. இங்குக் கழிவுநீர் வெளியேறக்கூட வழியில்லை. சுகாதாரமில்லாத சூழ்நிலை யால் சில மாதங்களுக்கு முன் ஒரு மாணவருக்குப் பன்றிக்காய்ச்சல் வந்தது. அதனால், பல்கலைக்கழகத்துக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டது. இதிலி ருந்தே இந்த வளாகத்தின் நிலைமையைத் தெரிந்துகொள்ளலாம்” என்றனர்.

துணைவேந்தர் கமலா சங்கரனைத் தொடர்புகொண்டு, மாணவர்கள், பணியாளர்கள் சொன்ன குற்றச்சாட்டு களைச் சொன்னோம். ‘‘கொஞ்சநேரம் காத்திருங்கள், வந்துவிடுகிறேன்’’ என்றார். சில மணி நேரங்கள் கழித்துத் துணை வேந்தர் சார்பாக நம்மைச் சந்தித்த பேராசிரியர் பிரபு, “விடுதியில் அவ்வப்போது ஏற்படும் குறைகளைச் சரிசெய்து வருகிறோம். பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் முன்பைவிட இப்போது கூடுதல் வசதிகள் செய்யப் பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் துணைவேந்தர் பல முயற்சிகளை செய்துவருகிறார்” என்று முடித்துக்கொண்டார்.

நீதி வழங்குவதைப் பாடமாகப் பயின்றுவரும் சட்டக் கல்லூரி மாணவர்களே, நீதி கேட்டுப் போராடும் அவலநிலையைப் போக்க சம்பந்தப் பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்!

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

‘எங்கள் பாடு ரொம்ப மோசம்!’

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி இரண்டாகப் பிரிக்கப்பட்டு… காஞ்சிபுரம் மாவட்டம், சிறுசேரி அருகே உள்ள புதுப்பாக்கத்தில் ஐந்து ஆண்டுகளுக்கான சட்டப்படிப்பும் திருவள்ளூர் அடுத்த பட்டறை பெரும்புதூரில் மூன்று ஆண்டுகளுக்கான சட்டப்படிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. நகரிலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமப் பகுதிகளில் இந்தக் கல்லூரிகள் இருப்பதால், மாணவர்கள் சென்று வரவே சிரமப்படுகிறார்கள். கல்லூரி கட்டி முடித்த ஒரே ஆண்டில் கட்டடங்கள் ஆங்காங்கே இடிந்து விழுகின்றன என்று புலம்புகிறார்கள், மாணவர்கள்.