Published:Updated:

கல்விக்கொள்கை: இரண்டு குரல்கள்!

கல்விக்கொள்கை: இரண்டு குரல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கல்விக்கொள்கை: இரண்டு குரல்கள்!

கல்விக்கொள்கை: இரண்டு குரல்கள்!

கல்விக்கொள்கை: இரண்டு குரல்கள்!

கல்விக்கொள்கை: இரண்டு குரல்கள்!

Published:Updated:
கல்விக்கொள்கை: இரண்டு குரல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கல்விக்கொள்கை: இரண்டு குரல்கள்!

த்திய அரசு தேசியக் கல்விக்கொள்கையை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிட்டு, ஜூன் மாதம் 30 வரை கருத்துகளை அனுப்பலாம் என்று சொல்லியிருக்கிறது. மாநில மொழிகளில் பிரதி இல்லாததால், கருத்துகளைச் சொல்வதில் பின்னடைவு இருந்தது. இதனால், எழுத்தாளர் விழியன் உள்ளிட்ட 40 பேர் கொண்ட குழு, இந்த வரைவைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

கல்விக்கொள்கை: இரண்டு குரல்கள்!

‘மீண்டும் ஒரு மொழி ப்போராட்டம் தமிழகத்தில் வெடிக்குமா?’ என்ற கேள்வியை உருவாக்கி விட்டது மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை முன்வரைவு. இந்தியைக் கட்டாயம் எனும் அம்சத்தி லிருந்து, அரசு திருத்தம் செய்து பின்வாங்கியதும் விவாதத்தின் சூடு குறைந்தது. ஆனால், தேசியக் கல்விக்கொள்கையில் பல விஷயங்களை  விவாதிக்க வேண்டும் என்று கல்வி யாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கல்விக்கொள்கை: இரண்டு குரல்கள்!

அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் தேசியக் கல்விக்கொள்கை குறித்துப் பேசினார். ‘`தேசியக் கல்விக்கொள்கை வரைவுத்திட்டத்தில் பல சாதகமான விஷயங்கள் உள்ளன. நான் பரிந்துரைத்த பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் 40 ஆண்டுகளாகக் கல்வி முறையில் மாற்றம் வரவேயில்லை. அதை மாற்றி, ஒரு குழந்தையின் 7 வயது வரை பள்ளியின் கண்டிப்பான சூழல் இல்லாமல், மகிழ்ச்சியான வீட்டுச்சூழல் இருப்பதுபோல அமைய வேண்டும். அப்போதுதான் அவர்களின் நினைவாற்றல், கவனித்தல் உள்ளிட்ட திறன்கள் வளரும். அடிப்படைத் தன்மைகளை விளையாட்டாகக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எனவே அதற்குரிய, உளவியல்  பயிற்சிகள் அவர்களுக்கு வேண்டும் என்பதால், ஆசிரியர் பயிற்சிக் கல்வியை நான்கு ஆண்டுகளாக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

10, 11, 12 பப்ளிக் தேர்வுகளை எடுத்துவிட்டு, செமஸ்டர் முறை கொண்டுவந்திருப்பதும் நல்லது. பாடச்சுமை குறையும். கூடவே திறன்வளர்க்கும் கல்வியும் இருப்பது நல்லது. அதேபோல, கல்லூரிப் பட்டப்படிப்பு என்பதை நான்காண்டுகளாக மாற்ற வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஏன் நான்காண்டுகள் என்றால், ஆராய்ச்சி முறை, வேலை வாய்ப்பைத் தேடிக்கொள்ளும் திறன் உள்ளிட்டவையும் கற்றுத்தரப்படும்.

கல்விக்கொள்கை: இரண்டு குரல்கள்!

ரிசர்ச் ஃபவுண்டேஷனுக்கு இருபதாயிரம் கோடி மட்டும் ஒதுக்கியிருப்பது போதாது. ஜிடிபியில் மூன்று சதவிகிதம் ஒதுக்கினால்தான் கல்விக்கொள்கையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். உலகளவில் உள்ள டாப்  200 பல்கலைக்கழகங்களை இந்தியாவுக்குள் உடனே அனுமதிப்பது சரியானது அல்ல. இன்னொரு விஷயம், தாய்மொழிக்கல்வியை நான் வலியுறுத்தியிருக்கிறேன். மும்மொழி வழிக் கல்வியில் பெரும்பாலும் வேறு மொழிகளை மாணவர்கள் தேர்ந்தெடுத்தாலும் ஆசிரியர்கள் இருக்க மாட்டார்களே என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. இது நடைமுறையில் வரும் எளிய சிக்கல்தான். ஓர் ஆசிரியரை நான்கு மொழிகளைக் கற்க வைத்துவிட்டால் இப்பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். ஒருசில மாற்றங்கள் வேண்டியிருந்தாலும், இக்கல்விக் கொள்கையை வரவேற்கிறேன்’’ என்கிறார்.

கல்விக்கொள்கை: இரண்டு குரல்கள்!

‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸி கஜேந்திரபாபு புதிய கல்விக்கொள்கை குறித்த வேறுபார்வையை முன்வைக்கிறார்.

“தமிழகத்தில் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை சமூக நீதியான கல்வி அமைப்பை, கடந்த ஐம்பதாண்டுக்காலமாக உழைத்து உருவாக்கி வைத்திருக்கிறோம். வேலைக்கு அனுப்பப்படும் பிள்ளைகளை, பள்ளிக்கூடத்திற்கு வரவழைக்க, மதிய உணவு தந்தார் காமராஜர். அது தொடங்கி சீருடை, காலணி எனத் தேவையின்பொருட்டு பள்ளிகளில் அவர்களைத் தக்கவைத்து, கல்வியை அளித்துவருகிறோம். ஆனால், இப்போது முன் வைக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக்கொள்கை என்பது எல்.கே.ஜி-யிலேயே தரமான கல்வி என்று சொல்லி, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் வடிகட்டும் தேர்வுகளை நடத்தத் திட்டமிடுகிறது. ஒரு குழந்தை வகுப்பில் தேர்ச்சியடையாமல் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்கப்படுகிறது என்றால், குடும்பத்தினர், சமூகத்தினரால் அது கடும் உளவியல் சிக்கலைச் சந்திக்க நேரிடும். பலர் பள்ளியிலிருந்து இடையிலேயே நின்றுவிடும் அபாயமும் இருக்கிறது. மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரும் குழந்தையிடம், நல்ல சூழலிலிருந்து வரும் குழந்தையைப்போல கற்றல் திறனை எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. 9-ம் வகுப்பில் தொழிற்கல்வி கற்கச் சொல்வதன்மூ லம், ‘உனக்குக் கல்வி வரவில்லையா... போய் அந்தத் தொழிலை வைத்துக்கொள்’ என்று கல்வியிலிருந்து விரட்டுவதாக இருக்கிறது. ப்ளஸ் டூ முடித்தபிறகு, திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு கோச்சிங் போகவேண்டும். செலவுக்கு எங்கே செல்வது? இதற்கு யாருக்கெல்லாம் முடிகிறதோ அவர்களே அடுத்த கட்டக் கல்வியை அடைய முடியும்.

பள்ளிகளை இணைப்பதைத்தான் பார்த்துவருகிறோம். இந்தத் தேசியக் கல்விக்கொள்கைத் திட்டத்தினால் கல்லூரிகளை இணைப்பது நடக்கப்போகிறது. குறிப்பிட்ட காலத்தில் டிகிரி அளிக்கும் விதத்தில் தரம் உயர்த்திக்கொள்ள வேண்டும், இல்லையெனில், அதற்கு அங்கீகாரம் அளித்த கல்லூரியுடன் இணைந்துவிட வேண்டும். இதனால், நம்முடைய அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் பலவற்றை இழக்க நேரிடும். அதனால், சாதாரண மக்கள் உயர்கல்வியைப் பெறுவது சிரமமாகிவிடும். அதேபோல, நான்கு ஆண்டுகள் ஆசிரியர் படிப்பு என்று இக்கொள்கை வரைவில் இருப்பதும் பாதகமே! அதுவும் பெண்கள் ஆசிரியர் படிப்புக்குச் செல்வது வெகுவாகக் குறையும். ஆசிரியர் பணியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்டவற்றுக்குத் தேர்வு என்று சொல்கிறது. அதனால், அனுபவம் மற்றும் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாது என்பது வெளிப்படை. இப்போது மேல்நிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இக்கொள்கையினால், செமஸ்டரில் அரியர் வைத்து, தேறி, தேர்வு எழுதி வரும்போது எப்படி இதெல்லாம் பின்பற்றுவார்கள்? 

கல்விக்கொள்கை: இரண்டு குரல்கள்!

மக்கள்மீது அக்கறையில்லாமல், கல்வியைச் சந்தைப்பொருளாக்கி விட்டனர். மருத்துவப் படிப்புக்கு நீட் போக, கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு வருவது பலரின் உயர்கல்விக் கனவைப் பொசுக்கிவிடும்.

தமிழக அரசு, ஜெயலலிதா வழியில் நடப்பது உண்மையெனில், இந்தக் கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும். இக்கல்விக்கொள்கை மாநில உரிமையை முற்றிலுமாகப் பறிக்கிறது. முதலமைச்சர் தலைமையிலான கல்விக்குழு என்று சொல்வதைக்கூட சாய்ஸாகத்தான் கொடுக்கிறது. பிரதமர் தலைமையிலான குழுவே அனைத்து முடிவுகளையும் எடுக்கும். அக்குழுவிலும் சுழற்சி முறையில் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். எனவே அனைத்து மாநிலங்களின் கருத்துகளும் கேட்கப்படப்போவதில்லை. இக்கல்விக்கொள்கை சமூக நீதிக்கு எதிரானது என்று உணர்ந்து, அனைத்துக்கட்சிக் கூட்டத்தினை நடத்த வேண்டும்’’ என்றார்.

மீண்டும் ஒரு விவாதக்களத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது புதிய கல்விக்கொள்கை.

- விஷ்ணுபுரம் சரவணன்; ஓவியம்: ஹாசிப்கான்