Published:Updated:

பெண் முன்னேற்றத்தின் ‘வேந்தர்’...

பெண் முன்னேற்றத்தின் ‘வேந்தர்’...
பெண் முன்னேற்றத்தின் ‘வேந்தர்’...

நோக்கத்தில் தெளிவு, பேச்சில் கனிவு, எந்நேரமும் உற்சாகத்தைத்  துளிர்க்கும் புன்னகை, இவைதான் டாக்டர் மரியஸீனா ஜான்சன்-இன் அடையாளங்கள். சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் கவனம், சமுதாயப் பணிகளில் அயராத மும்முரம் என வலம் வந்துகொண்டிருக்கும் டாக்டர் மரியஸீனா ஜான்சனை, சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் பதவியிலிருந்து ‘வேந்தர்’ஆக உயர்த்தியுள்ளது அப்பல்கலைக்கழகத்தின் தலைமை. 

பெண் முன்னேற்றத்தின் ‘வேந்தர்’...

சத்யபாமா நிறுவனத்தின் தலைவர் மேரி ஜான்சன் மற்றும் அறங்காவலர் குழுவின் ஒப்புதலுடன் சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தராக பதவியேற்றுள்ள மரியஸீனா ஜான்சன், மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட இந்தியாவின் 100 மகளிர் சாதனையாளர்கள் பட்டியலிலும், மத்திய அரசின் நிதி ஆயோக் மற்றும் ஐநா அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட இந்தியாவின் மாற்றத்துக்கு பங்களித்த  "Top 12 Women transforming India” பட்டியலிலும் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனைப் பயணம்...

'கல்விப் புரட்சியாளர்', ‘வள்ளல்' எனப் புகழ்பெற்ற சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் நிறுவனர் கர்னல் டாக்டர் ஜேப்பியார் அவர்களின் மகளாகிய டாக்டர் மரியஸீனா ஜான்சன் அவர்கள், கல்வித்துறை மட்டுமின்றி சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, கொடையாளர், திறமையானவர்களை ஊக்குவித்தல் எனப் பன்முகத்துடன் கடந்த 20 வருடங்களாக செயல்பட்டுவருகிறார்.

இவருடைய துடிப்பான தலைமையின் கீழ், சத்யபாமா பல்வேறு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்திவருகிறது. குறிப்பாக, இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து வடிவமைத்துத் தயாரித்த "SATHYABAMASAT" என்ற செயற்கைக்கோளை ஏவுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் டாக்டர் மரியஸீனா ஜான்சன். இதனுடன், மேலும் 19 செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ 22-6-2016 அன்று விண்ணில் செலுத்தியது. இந்தச் சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து பாராட்டுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பெண் முன்னேற்றத்தின் ‘வேந்தர்’...

"My Saturday University" என்கிற திறன் மேம்பாட்டு வகுப்புகளை அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தியவர் மரியஸீனா. இத்திட்டத்தின் மூலம் வருடந்தோறும் 50 அரசுப் பள்ளிகள் பயனடைகின்றன,

புதிய பொருள்கள் மற்றும் வழிமுறைகளை உருவாக்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவர் வழங்கிய ஊக்கத்தின் மூலம் பயோ டெக்னாலஜி, வேதியியல், நானோ அறிவியல் நானோ டெக்னாலஜி, பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், மெக்கானிக்கல், பயோ மெடிக்கல் போன்ற துறைகளில் 60-க்கும் மேற்பட்ட பேட்டன்ட்களை பல்கலைக்கழகம் பதிவு செய்திருக்கிறது.

இவர் 'ஜேப்பியார் ஐ.ஏ.எஸ் அகாடமி' என்ற நிறுவனத்தை சிவில் சர்வீஸஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காகத் தோற்றுவித்து ஒவ்வொரு வருடமும் திறமை வாய்ந்த 400 மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் எடுக்க வழிவகை செய்துள்ளார்.

“சமுதாயத்துக்கு தன்னால் இயன்றதைச் செய்வதை,
ஒவ்வொரு குடிமகனும் கடமையாகக் கருதவேண்டும்.”
- டாக்டர் மரியஸீனா ஜான்சன்

சமூகச் சீர்திருத்தவாதி

சமூகச் சீர்திருத்தவாதியாக, சமூகத்தால் பிற்படுத்தப்பட்ட, வறுமையில் வாடும் ஏழை மக்களுக்காக உழைக்கும் மரியஸீனா, பெண் தொழில்முனைவோர் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் தொழில்முனைவோரின் முயற்சிகளும் பற்றி இவர் ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர்களுக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும், திறன் மேம்பாட்டு வகுப்புகளை இலவசச் சேவையாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். பள்ளிகளைத் தத்தெடுக்கும் திட்டத்தின் மூலம் ஏழு பஞ்சாயத்துப் பள்ளிகளைத் தத்தெடுத்தும் இரண்டு கிராமங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிப்படைத் தேவைகளையும் கட்டமைப்பு வசதிகளையும் செய்துகொடுத்துள்ளார் டாக்டர் ஜான்சன்.

பெண் முன்னேற்றத்தின் ‘வேந்தர்’...

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம், TNCDW, NABARD, EDI ஆகியவற்றுடன் இணைந்து பெண்களுக்கான திறன் மேம்பாட்டு வகுப்புகள் டாக்டர் மரியஸீனாவின் மேற்பார்வையில் நடத்தப்பட்டுவருகின்றன. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெண்கள் முன்னேற்றத்துக்கான தேசியக் குழு (NMEW) ஒப்புதல் அளித்த "Thematic Convergence on poverty, alleviation of Rural Women" என்ற திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளார்.

“Blessed to Bleed”, எனும் திட்டத்தின் மூலம் மலிவான விலையில் சானிட்டரி நாப்கின்களை ஏழைப் பெண்களுக்கு வழங்கும் முயற்சியிலும் இவரின் குழு இறங்கியுள்ளது. “My Happiness” எனும் திட்டத்தின் மூலம் மன நலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ சேவையை செய்துவருகிறார். பெண்கள், ஆண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், என பாகுபாடின்றி அனைவரும் தங்களின் பங்களிப்பை சமுதாயத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று பணியாற்றிவருபவர் டாக்டர் மரியஸீனா.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:

பாராட்டத்தக்கச் செயல்கள் பல புரிந்ததற்காக, “பாரத் ஜோதி விருது'. கல்வித்துறையில் *Extra Ordinary Women of India' விருது. கல்விக்காக “ஷைனிங் இமேஜ் ஆஃப் இந்தியா தங்கப்பதக்கம். Chennai Turns Pink அமைப்பின் பிரதான தூதர். தமிழ்நாட்டில் மிகச்சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கம் நிறைந்த ஈடுபாட்டுக்கான டைம்ஸ் குரூப்பின் Edupreneurs விருது. எஸ்.சந்த் குரூப்பின் Indian Education விருதுகள். University facilitating Sports-க்காக Assocham Award. பல்கலைக்கழகத்தில் சோலார் சமையல் அமைப்புக்கு என MNRE அளித்த விருது மற்றும் பல விருதுகளையும் கௌவுரவங்களையும் பெற்றுள்ளார் மரியசீனா.

சத்யபாமா நிகநிலைப் பல்கலைக்கழகம்

சென்னை சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் நாட்டின் 50 முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. 'நாக்' அமைப்பால் 'ஏ' கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளது, சர்வதேச கியூ.எஸ். அமைப்பால் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. உலகளவில் இந்தக் குறியீடு பெற்ற ஆறு இந்திய நிறுவனங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. டைம்ஸ் தரப்பட்டியலில் சர்வதேச மற்றும் ஆசிய அளவில் முன்னணியில் உள்ளது.

சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் (MHRD) கேட்டகரி 'ஏ' பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு 24 பட்டப்படிப்புகளும், 46 பட்டமேற்படிப்புகளும் பயிற்றுவிக்கப்பட்டு, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பல பாடப் பிரிவுகளில் 850-க்கும் மேற்பட்ட முனைவர்கள் உருவாகியுள்ளனர். இங்கு 17 ஆராய்ச்சி மையங்களும், ஒரு பொது மருத்துவமனை மற்றும் பல் மருத்துவமனையும் இயங்கி வருகின்றன.