Published:Updated:

தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி

தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி
தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி
தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி

சென்னை: தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சிலின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ - AICTE ) தலைவர் மான்தா, "தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகள், 7 பாலிடெக்னிக் கல்லூரிகள்,  பிஃபார்ம் கல்லூரிகள் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வந்த 8 பொறியியல் கல்லூரிகள், தாமாகவே முன் வந்து மூடி விடுவதாக அறிவித்துள்ளன.

##~~##
தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். இதுவரை மகாராஷ்டிராவில் இருந்து மட்டுமே பதில் வந்துள்ளது" என்றார்.