Published:Updated:

ஆங்கிலமும் அவசியம்... தமிழுக்கு சிலையும் முக்கியம்-ஈஸ்வரன்

Vikatan Correspondent
ஆங்கிலமும் அவசியம்... தமிழுக்கு சிலையும் முக்கியம்-ஈஸ்வரன்
ஆங்கிலமும் அவசியம்... தமிழுக்கு சிலையும் முக்கியம்-ஈஸ்வரன்

சேலம்: அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை கொண்டு வருவது பாராட்டுக்குரிய விஷயம். அதேபோல் தமிழ் தாய் சிலையும் முக்கியமான ஒன்று என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிறுவன தலைவர் ஈஸ்வரன் கூறினார்.

ஆங்கிலமும் அவசியம்... தமிழுக்கு சிலையும் முக்கியம்-ஈஸ்வரன்

இன்று சேலத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஈஸ்வரன், ''தனியார் கல்வி நிலையங்களுக்கு சமமாக ஏழை, எளிய மக்களுக்கு எட்டாமல் இருந்த ஆங்கில வழிக் கல்வியை அரசு பள்ளிகளில் கொண்டு வருவதால் ஏழை மக்களின் வாழ்க்கை நிலை மாறும்.

ஏழைக் குழந்தைகள் ஆங்கில வழிக் கல்வி பயின்று கம்யூட்டர், இண்டர்நெட், ஆன்லைன் என பல தொழில்களுக்கு சென்று மேல் தட்டு மக்களுக்கு சமமாக சம்பளம் வாங்கும்போது தானாகவே குடும்பத்தின் கஷ்டங்கள் நீங்கி பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கு வர முடியும்.

தமிழ் வழியில் கல்வி பயின்றால் நிச்சயம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படாது. டில்லிக்கு சென்று பாராளுமன்றத்தில் வாதிடவும் முடியாது. இதை உணர்ந்து தமிழக அரசு அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை கொண்டு வருகின்ற செயலை பாராட்டுவதோடு மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

##~~##
அதேபோல தமிழ் தாய் சிலையும் முக்கியம். இங்கிலாந்தில் சுதந்திர தேவி சிலை வைத்திருப்பது போல், இங்கேயும் தமிழ் தாய் சிலை அமைத்தால் அந்த இடம் சுற்றுலா தளமாக மாறும். வெளிநாட்டில் இருந்து நிறைய பேர் பார்க்க வருவார்கள். அதனால் வருமானம் கிடைக்கும். வருமானம் வந்தால் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடையும். அதனால் தமிழ் தாய் சிலை வைப்பது முக்கிய தேவை’’ என்றார். 

-வீ.கே.ரமேஷ்

படம்: க. தனசேகரன்