Published:Updated:

`கல்லூரி நிர்வாகம் கண்டுக்கவேயில்லை!’ - ஏற்காடு அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் மறியல்

`கல்லூரி நிர்வாகம் கண்டுக்கவேயில்லை!’ - ஏற்காடு அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் மறியல்
News

ஏற்காடு தனியார் கல்லூரியைக் கண்டித்து மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

`கல்லூரி நிர்வாகம் கண்டுக்கவேயில்லை!’ - ஏற்காடு அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் மறியல்

ஏற்காடு தனியார் கல்லூரியில் வாகன வசதி பற்றாக்குறையும், பழுதடைந்த வாகனங்களால் விபத்துகள் ஏற்படுவதையும் கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று சேலம் டூ அரூர் மெயின் ரோட்டில் ஏற்காடு அடிவாரம் குப்பனூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள்.

இதுபற்றி மாணவ, மாணவிகளின் சார்பாக பேசிய விவசாயிகள் மகா சபையின் மாவட்ட செயலாளர் அய்யந்துரை, ''ஏற்காடு வாழவந்தி மலைக்கிராமத்தில் கல்லூரி இருக்கிறது. இந்த கல்லூரியில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இவர்கள் ஆத்தூர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், சேலம், தர்மபுரி எனப் பல ஊர்களிலிருந்து படிக்க வருகிறார்கள். கல்லூரி வாகனங்கள் எஃப்.சி., காட்டாமல் பழுதடைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாகனங்களில் மாணவ, மாணவிகள் மலைப்பகுதியில் அச்சத்தோடு பயணங்களை மேற்கொள்ளுகிறார்கள். நேற்று மாலை கல்லூரியை முடிந்து வீட்டிற்கு வரும் போது கல்லூரி வாகனத்தில் பிரேக் கட் ஆகி மலையில் இருந்து  வாகனம் உருண்டு கீழே விழுந்தது.

`கல்லூரி நிர்வாகம் கண்டுக்கவேயில்லை!’ - ஏற்காடு அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் மறியல்

இதில் 28 பேர் காயம் அடைந்தார்கள். 7 பேருக்கு அதிக காயங்கள் ஏற்பட்டது. இத்தகவலை மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் வாழவந்தியில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுத்து  அனுப்பி இருக்கிறார்கள். மாணவ, மாணவிகள் வெளியில் சொன்னால் செய்முறை மதிப்பெண் குறைத்து விடுவதாக மிரட்டுவதால் பேசப் பயப்படுகிறார்கள்'' என்றார்.

இதுபற்றி மாணவர்களிடம் கேட்டதற்கு, ''அண்ணா 500 பேருக்கு மேல படிக்கிறோம். எங்க கல்லூரியில் மொத்தம் 11 வாகனங்கள் இருக்கிறது. 6 வாகனங்கள் பழுதடைந்து இருக்கிறது 5 வாகனம் மட்டும் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த 5 வாகனமும் அபாய கன்டிஷனில் இருக்கிறது. இதில் பயணம் செய்யவே பயமாக இருக்கிறது. கல்லூரி நிர்வாகத்திடம் சொன்னால் கேட்கவில்லை. படிக்கிற வேலையை மட்டும் பார்க்க சொல்லுகிறார்கள்'' என்றார்.

கல்லூரி வாகனத்தின் டிரைவர் சீனி, ''சார் கல்லூரி வாகனத்தில் பிரேக் பழுதாகி உடையும் தருவாயில் இருந்தது. இந்த வாகனத்தில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லுவது பாதுகாப்பு இல்லை. நான் எடுக்க மாட்டேன். என்று கூறியும் இந்த ஒரு முறை போயிட்டு வாங்க என்றார். கல்லூரியில் இருந்து 1 கி.மீட்டர் ஹரிராமா கோயில் வந்ததும் பிரேக் கட் ஆகி வாகனம் மலையில் இருந்து உருண்டு விட்டது. அதிஷ்டவசமாக நாங்கள் உயிர் தப்பினோம். இல்லையென்றால் அனைவரும் இறந்திருப்போம்'' என்றார்.

இதுபற்றி கல்லூரியின் முதல்வர் மாரிமுத்துவிற்கு தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் அலைபேசியை எடுக்கவில்லை.