Published:Updated:

`ரயில் தாமதம்; நீட் தேர்வைத் தவறவிட்ட மாணவர்கள்!' - மீண்டும் வாய்ப்பு வழங்க மத்திய அரசு முடிவு

`ரயில் தாமதம்; நீட் தேர்வைத் தவறவிட்ட மாணவர்கள்!' - மீண்டும் வாய்ப்பு வழங்க மத்திய அரசு முடிவு
`ரயில் தாமதம்; நீட் தேர்வைத் தவறவிட்ட மாணவர்கள்!' - மீண்டும் வாய்ப்பு வழங்க மத்திய அரசு முடிவு

ரயில் தாமதத்தால் நீட் தேர்வைத் தவறவிட்ட கர்நாடக மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார். 

`ரயில் தாமதம்; நீட் தேர்வைத் தவறவிட்ட மாணவர்கள்!' - மீண்டும் வாய்ப்பு வழங்க மத்திய அரசு முடிவு

Photo: India Rail Info

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இந்தத் தேர்வு நடைபெற்றது. இதற்காக மாணவர்கள் 1.30 மணிக்கு முன்பாகவே தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹூப்ளி வரை செல்லும் ஹம்பி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் - 16591) ரயிலில் 200-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் பெங்களூருக்குப் பயணம் செய்தனர். பெங்களூருக்கு காலை 6 மணிக்கு வந்தடைய வேண்டிய அந்த ரயில் 6 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக மதியம் 2.30 மணிக்கு வந்தடைந்தது. இதனால், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வெழுத முடியாமல் போனது. இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ரயில்வேத் துறை அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடியை டேக் செய்து ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

`ரயில் தாமதம்; நீட் தேர்வைத் தவறவிட்ட மாணவர்கள்!' - மீண்டும் வாய்ப்பு வழங்க மத்திய அரசு முடிவு

இந்த நிலையில், `ரயில் தாமதத்தால் நீட் தேர்வை எழுதமுடியாமல் போன கர்நாடக மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்' என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார். இதனால், நீட் தேர்வைத் தவறவிட்ட கர்நாடக மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நன்றி தெரிவித்திருக்கிறார். `கோரிக்கையை பரிசீலனை செய்து, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு எங்கள் நன்றி' என அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

`ரயில் தாமதம்; நீட் தேர்வைத் தவறவிட்ட மாணவர்கள்!' - மீண்டும் வாய்ப்பு வழங்க மத்திய அரசு முடிவு

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையைத் தொடர்புகொண்ட கர்நாடக தலைமைச் செயலாளர் விஜய பாஸ்கர், மாணவர்களின் நிலையை எடுத்துக் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக உயர்கல்வித் துறை மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநில தலைமைச் செயலகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.

`ரயில் தாமதம்; நீட் தேர்வைத் தவறவிட்ட மாணவர்கள்!' - மீண்டும் வாய்ப்பு வழங்க மத்திய அரசு முடிவு

அதேபோல், கர்நாடக மாணவர்களின் நிலையைக் கருத்தில்கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என பிரகாஷ் ஜவடேகருக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதத்தால் நீட் தேர்வைத் தவறவிட்ட மாணவர்களுக்கு அந்தத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது. 

மத்திய அரசின் இந்த முடிவு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே? உங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு