Published:Updated:

`ஒரு தலைமுறையையே பாதித்த பாடத்திட்ட மாற்றம்!’ - பேராசிரியர் அரங்க மல்லிகா

`ஒரு தலைமுறையையே பாதித்த பாடத்திட்ட மாற்றம்!’ - பேராசிரியர் அரங்க மல்லிகா
`ஒரு தலைமுறையையே பாதித்த பாடத்திட்ட மாற்றம்!’ - பேராசிரியர் அரங்க மல்லிகா

நீட் தேர்வில் தொடரும் குளறுபடிகள், அவற்றால் அலைக்கழிக்கப்படும் மாணவ மாணவிகள் என ஒருபக்கம் கலவரம் நடந்து கொண்டிருக்க இந்தாண்டு பிளஸ் டூ பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கடினமான இயற்பியல் மற்றம் கணக்குப் பாடங்களால் மதிப்பெண் குறைந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் மாணவ, மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள்.

இந்தச் சூழலை மாணவ, மாணவிகள், பெற்றோர் எதிர்கொள்வது எப்படி? இந்த குளறுபடிகளுக்குக் காரணங்கள் என்ன என்ற கேள்விகளை சென்னை எத்திராஜ் கல்லூரியின் பேராசியர் அரங்கமல்லிகாவிடம் முன்வைத்தோம். கல்லூரிக் கற்றல் தவிர,  அரங்க மல்லிகா பிளஸ் டூ மாணவ மாணவிகளுக்கு ஆலோசகராகவும் பல பள்ளிக்கூடங்களில் செயலாற்றி வருகிறார். `வழிகாட்டலும், ஆலோசனை கூறலும்’ எனும் இவரது நூல், பல பள்ளி மாணவ, மாணவிகளைத் தற்கொலை மனப்பான்மையில் இருந்து காப்பாற்றியுள்ளது.  நீட் தேர்வு பற்றி பேசத் தொடங்கினார்.

"நீட் தேர்வில் தமிழ்நாட்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் சந்திக்கும் இந்தப்பிரச்சனை இந்தியா முழுவதிலும் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் அதிகம் செய்திகளில் வெளிவருவது தமிழ்நாடு தொடர்புடையதாகவே உள்ளது. தேர்வெழுத மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் மாற்றங்கள் இருந்தால் அது உடனடியாகத் தெரிவிக்கப்படவேண்டும். அடிப்படையில் இந்தத் தேர்வை எழுதுபவர்கள் சிறு குழந்தைகள், எதையும் தாங்களாக முடிவெடுக்க முடியாதவர்கள். எனவே பெற்றோர்தான் இதில் கூடுதல் கவனத்தோடு இருக்கவேண்டும்.

இறுதி நேரத்தில் மையங்களை மாற்றுவது, கடினமான விதிமுறைகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதெல்லாம் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாகக் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். அவர்களின் கற்றல் திறனில் கவனச்சிதறலை ஏற்படுத்தும், ஒரு குறிக்கோளுடன் படிக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற எதிர்மறையான புறச்சூழல்கள் அவர்களின் மன அழுத்தத்திற்குக் காரணமாக இருக்கக்கூடாது. இதைத் தவிர்க்கவேண்டியது அரசின் தார்மிகக் கடமை. 

`ஒரு தலைமுறையையே பாதித்த பாடத்திட்ட மாற்றம்!’ - பேராசிரியர் அரங்க மல்லிகா

பொதுவாகவே பிளஸ் 2 காலகட்டம் என்பது ஒரு மாணவர், மாணவியின் வாழ்க்கையில் உளவியல் ரீதியாக நெருக்கடியான வயது. அதே நேரம் நீட் என்பது ஒரு மிகப்பெரிய டார்கெட். தங்கள் வயது, இயல்புக்கு மாறாகச் செலுத்தவேண்டிய கூடுதல் கவனம் ஆகிய இண்டையும் தாண்டி பொதுத்தளத்தில், சமூகத்தில் அதிலும் இந்திய அளவில் போட்டியிடுவது என்பது பெரும் சவால். மாணவ, மாணவிகளுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் மன நெருக்கடியான சூழல் இது. ஜனநாயகக் குடியுரிமை உள்ள குழந்தைக்கு, கல்வி தேவையாகிவிடும்போது, அந்தக் கல்வியை தார்மிகப் பொறுப்போடு சிக்கலின்றி வழங்குவதற்கு அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும். 

நீட் என்பது மூளைக்கான போட்டி, சமூகத்தில் இந்திய அளவில் எதிர்கொள்ளவேண்டிய போட்டி என்ற நிலை இருந்தால் அந்தக் குழந்தை மனப்பிறழ்வுக்கு ஆளாகிவிடும். தேர்வில் தோற்றுப்போனால் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் வரை செல்கிறது என்றால் அது ஆரோக்கியமானது அல்ல. நீட் என்பது மூளைக்கான போட்டி அல்ல, இந்திய அளவில் சமூகத்தில் எதிர்கொள்ளவேண்டிய போட்டி அல்ல, அது சிக்கலற்ற கல்வியைத் தரக்கூடிய ஒரு தேர்வாக இருக்கவேண்டும். 

நீட் பாடத்திட்டத்தின் பின்னணி இப்படி இருக்க, இந்தாண்டு பிளஸ் டூ மதிப்பெண்கள் தமிழகம் முழுவதுமே சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. பெற்றோரோ ஸ்தம்பித்துப் போனார்கள்.  வினாத்தாள்கள் கடினமாக அமைக்கப்பட்டிருக்கிறது.. குறிப்பாக இயற்பியல் யாராலும் எழுதமுடியாத நிலையில் இருந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல கணக்கு பாடமும் கடினமாக இருந்ததாக தெரிகிறது. அரசே கூடுதல் மதிப்பெண்கள் தந்து ஊக்கப்படுத்த உத்தரவிட்டதால், இயற்பியலில் ஓரளவுக்கு மதிப்பெண் பெற்றது என்பது நல்ல செய்தி.

`ஒரு தலைமுறையையே பாதித்த பாடத்திட்ட மாற்றம்!’ - பேராசிரியர் அரங்க மல்லிகா

இந்தப் புதிய இயற்பியல் மற்றும் கணிதப் பாடத்திட்டம் என்பது நீட் தேர்வுக்கு ஏற்ப அமைத்தோம் என்று அரசு சொல்லுமானால், அது மிகவும் சரியானதே. அதில் அரசை எந்தவிதத்திலும் நாம் குறை கூற முடியாது. ஆனாலும்,  அந்தத் தேர்வுக்காக மாணவ, மாணவிகளைத் தயார் செய்கிறோம் என்றுபாதிப்புக்குள்ளாக்குவது சரியல்ல. 

இப்போது சில கேள்விகளும் எழுகின்றன. யாருக்கு இந்த நீட் தேர்வு? பிளஸ் டூ படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் எதற்கு நீட்? எல்லோருமே மருத்துவக் கல்வி கற்கச் செல்கிறார்களா? கலை, அறிவியல் போகிறவர்களுக்கும் இடம் இருக்க வேண்டாமா? அனைவருக்கும் ஒரே அளவான தேர்வுத்தாள்கள் எதற்கு? எனவே அரசு இதுபற்றியெல்லாம் பரிசீலிக்கவேண்டும். 

சரி, இதுபோன்ற கடினமான பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து, வினாத்தாள் தயாரித்து மாணவ, மாணவிகளை நீட் தேர்வுக்குத் தயார் செய்கிறோம் என்கிறீர்கள். ஒரு ஆசிரியருக்கு நீட் தேர்வுக்குத் தயாராக ஓரியன்டேஷன் அளித்துள்ளீர்களா?  ஒரு ஆசிரியர் பணி என்பது அர்ப்பணிப்பு நிறைந்த பணி. தங்களுக்கு இதுபோன்ற ஓரியன்டேஷன் அளிக்கப்படவிட்டாலும்கூட, அந்த ஆசிரியர்கள் தங்களையும் மீறித்தான் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

`ஒரு தலைமுறையையே பாதித்த பாடத்திட்ட மாற்றம்!’ - பேராசிரியர் அரங்க மல்லிகா

கார்ப்ரேட் பண்பாடு, உலகமயமாதல் சூழல் ஆகியவை பிரிகேஜி முதலே நெருக்கடியான கல்விச் சூழலை உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழலில் பணியாற்ற ஆசிரியருக்கே அதிகப் பங்கும், கடமையும்  உள்ளது. எனவே அவர்களுக்கும் கற்பிக்க ஒரு சிக்கலற்ற சூழல், பயிற்சி கொடுக்கப்படவேண்டும். பள்ளி நிர்வாகங்களும் இத்தனைப் பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகளின் கல்வி நலன் சார்ந்து செயல்படவேண்டும்.

`ஒரு தலைமுறையையே பாதித்த பாடத்திட்ட மாற்றம்!’ - பேராசிரியர் அரங்க மல்லிகா
`ஒரு தலைமுறையையே பாதித்த பாடத்திட்ட மாற்றம்!’ - பேராசிரியர் அரங்க மல்லிகா

ஒவ்வொருதோல்வியும் வெற்றியின் முதல்படி. அவமானம்தான் வெகுமானம். ஒரு குழந்தை பெயிலானால்  ஏளனமாகப் பார்ப்பது, 50 மதிப்பெண் வாங்கக்கூடத் துப்பில்லை என்று திட்டுவது அநாகரிகம்.  அந்த மாணவர் கலை அறிவியலில் திறனற்றவராக இருக்கலாம். ஆனால், மெக்கானிக்கல் மற்றும் வேளாண்மையில் டாப்பராக இருக்கலாம். அவர்களிடம் என்ன திறன் இருக்கிறதோ அதைக் கண்டறிந்து வழிகாட்டுவதுதான் ஆசிரியர், பெற்றோர் கடமை.’’

இறுதியாக, இந்தப் புதிய இயற்பியல், கணிதப் பாடத்திட்டங்களை அரசு பாசிடிவான எண்ணங்களோடு அறிமுகம் செய்திருந்தாலும்கூட, பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது நம் மாணவ, மாணவிகளுக்கும் சமமான சாய்ஸ் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். பல்வேறு கனவுகளுடன் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்று, தாங்கள் விரும்பிய மேற்கல்வியைக் கற்க இயலாத வகையில், பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கவலையையும் பதிவு செய்யவேண்டியது அவசியம். அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு இதுபோல நடக்காமல் அரசு பார்த்துக்கொள்ளவேண்டும். இந்தப் புதிய பாடத்திட்டம் இந்த செட் மாணவ, மாணவிகளுக்கு ஒரு பின்னடைவுதான்" என்றார் அரங்க மல்லிகா.

- விஸ்வநாத்

Vikatan
அடுத்த கட்டுரைக்கு