Published:Updated:

`ப்ளீஸ், தண்ணீரை வீணாக்காதீங்க !' - மூன்றாம் வகுப்பு மாணவியின் ஓவியக் கோரிக்கை

விகடன் விமர்சனக்குழு

கும்பகோணத்தைச் சேர்ந்த `பூரணி' என்ற மூன்றாம் வகுப்பு மாணவி, தொடர்ந்து சந்தித்துவரும் தண்ணீர் பிரச்னையை மையமாகக் கொண்டு ஓவியங்களை வரைந்துள்ளார். இதனை, பள்ளி வளாகத்திலேயே கண்காட்சிக்காக வைத்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். நீர் நிலைகளின் கட்டமைப்பு, தண்ணீர் வீணாகுதல், குறிப்பாக, 40 வகையான பண்டைய கால நீர் ஆதாரங்கள் போன்றவை இவர் ஓவியங்களில் இடம்பெற்றுள்ளது.

`ப்ளீஸ், தண்ணீரை வீணாக்காதீங்க !' - மூன்றாம் வகுப்பு மாணவியின் ஓவியக் கோரிக்கை

இதுகுறித்து பூரணி கூறும்போது, ``நாம இப்போ தண்ணிக்கு ரொம்ப கஷ்டப்படும் நிலைமை வந்திருக்கு. இதற்கெல்லாம் காரணம், நாம் நம் ஆறு, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை ஒழுங்கா பராமரிக்காம விட்டுட்டோம். அந்தக் காலத்தில இதைவிட அதிகமா நீர்நிலைகள் இருந்துச்சாம். ஆனா, அது எதுவுமே இப்போ இல்ல. எங்க அப்பா, அம்மா, ஆசிரியர்கள். தண்ணீரைப் பாதுகாக்க வேண்டும்னு சொல்லுவாங்க. அப்போதான், நாம எல்லோருக்கும் தண்ணீர் பாதுகாக்கிறதன் அவசியத்தை சொல்லணும்னு ஓவியமா வரைஞ்சிருக்கேன். ப்ளீஸ், யாரும் தண்ணீரை வீணாக்காதீங்க !' என்று பார்வையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறார் மாணவி.

`ப்ளீஸ், தண்ணீரை வீணாக்காதீங்க !' - மூன்றாம் வகுப்பு மாணவியின் ஓவியக் கோரிக்கை

ஓவியம் வரைந்தது மாணவியாக இருந்தாலும், அவருக்கு அந்தத் தூண்டுதலை ஏற்படுத்தி அதை ஒரு பொது நிகழ்வாக ஏற்பாடு செய்ததுவரை பூரணியின் பெற்றோர்களே துணையாக இருந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ``பொய்கை ஆழிக்கிணறு, இளஞ்சி, கழிங்கு, குமிழி, ஊற்று போன்ற நாற்பது வகையான நீர்நிலைகள் நம் முன்னோர்கள் கால பராமரிப்பில் இருந்துள்ளது. அவை இப்போது இல்லையென்றாலும், நம் கண்முன் உள்ள நீர்நிலைகள் வறண்டு பெரும் அழிவைச் சந்தித்து வருகிறது. இருக்கும் சிலவற்றையும் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோம்' என்றனர்.

Vikatan