Published:Updated:

அவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா?

அவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா?
அவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா?

அவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா?

2009-ம் ஆண்டு வெளியான `அவதார்'-தான் உலகிலேயே அதிகம் வசூல் செய்த திரைப்படமாக திகழ்கிறது. அவதாரின் வசூலை 10 வருடங்கள் கழித்து வெளிவந்துள்ள `அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' முந்திச் செல்ல வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவதாரோ அவெஞ்சர்ஸோ, இரண்டு பிரமாண்டப் படைப்புகளும் வெற்றியடைய உதவியிருப்பது ஹாலிவுட்டின் பிரம்மாஸ்திரமான Visual Effects (VFX) அல்லது கம்பயூட்டர் கிராஃபிக்ஸ் என நிச்சயம் கூறலாம்!

அவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா?

கம்ப்யூட்டர் VFX வருவதற்கு முன், கேமரா, லைட்டிங், விசேஷ செட்டுகள் மற்றும் அறிவுபூர்வமான ட்ரிக் ஷாட்ஸைப் பயன்படுத்தி நம்பமுடியாத காட்சிகளை சினிமாவில் உருவாக்கி வந்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை, பாதாள பைரவி, வேதாள உலகம், மாயா பஜார் மற்றும் பழைய விட்டலாச்சார்யா திரைப்படங்கள் பலவும் இந்தப் பாணியில் உருவாக்கப்பட்டவைதான்...

அவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா?

மாடர்ன் விஷுவல் எஃபெக்ட்ஸ்...

1993-ம் ஆண்டு வெளிவந்த `ஜுராஸிக் பார்க்' திரைப்படத்தை விஷுவல் எஃபெக்ட்ஸ்ஸில் ஒரு மைல் கல் எனலாம். ஆனால், இதில் 30% மட்டுமே கிராஃபிக்ஸ் மீதி 70% அனிமேட்ரானிக்ஸ் (Animatronics)! ஆக்ரோஷத்துடன் துரத்திவரும் டி.ரெக்ஸ்ஸை  நினைவிருக்கிறதா? உண்மையில் அது வெளியிலிருந்து இயக்கக்கூடிய 20 அடி பொம்மையே. ஆனால், அதுவொரு பொம்மையல்ல உண்மை என நம்மை நம்பவைக்க உதவியது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அங்கேதான் ஜுராஸிக் பார்க் வெற்றியடைகிறது.

அவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா?

முழுக்க முழுக்க CGI வகை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட முதல் திரைப்படம் 1995-ம் ஆண்டு வெளிவந்த `டாய் ஸ்டோரி'. இதன்பிறகு, நடிகர்களின் அங்க அசைவுகளைக் கவர்ந்து படம்பிடித்து, கதைக்கு ஏற்றார்போல அவற்றை மாற்றியமைக்கும் `மோஷன் கேப்சர் (Motion Capture)' தொழில்நுட்பம் தற்போதைய டிரெண்ட்டாக இருக்கிறது. முன்பு குறிப்பிட்டதுபோல, வசூல் சரித்திரம் படைத்த `அவதார்' திரைப்படத்தில் வருகிற முக்கிய நீல நிற நாவி கதாபாத்திரங்கள் அனைத்தும் இந்தத் தொழில்நுட்பத்தில் உருவானவையே! அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வில்லனான தானோஸும் மோஷன் கேப்ச்சர்டு ரூபம்தான்!

அவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா?

VFX-இல் வாய்ப்புகள் எப்படி?

ஹாலிவுட்டைப் போல இந்தியாவிலும் எந்திரன், பாகுபலி, 2.0 என கிராஃபிக்ஸ் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதுமட்டுமல்லாது, டி.வி., வெப் சீரீஸ், விளம்பரங்கள், யூடியூப், மொபைல் ஆப்ஸ், வீடியோ கேம்ஸ், மருத்துவத்துறை, பொறியியல், வர்ச்சுவல் ரியாலிட்டி, 3D, எனத் துறை வாரியாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸின் தேவைகள் தற்போது அதிகரித்துவருகின்றன. ஒரு சிறந்த VFX கலைஞராக திகழ்வதற்கு நிறைய பொறுமையும், கூர்மையான கவனமும் தேவை. அதைவிட முக்கியம் அனுபவம், ஆம் VFX ஒரு செயல்முறைப் படிப்பு, புத்தகங்களில் இருந்து கற்றுக்கொள்வதைவிட செய்துபார்த்து நமக்குக் கிடைக்கும் இறுதி வெளியீடே நம் திறமைக்கான சான்றிதழாகும்!

அவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா?

சென்னையில் VFX செயல்முறை வகுப்புகள்...

சென்னையில் இயங்கிவரும் iGene School of VFX Technology, விஷுவல் எஃபெக்ட்ஸ்ஸில் தீவிர ஆர்வமுள்ளவர்களுக்கான 6 மாத கோர்ஸை வழங்குகிறது. பேட்ட, சர்கார், 2.0, ஐரா, காஷ்மோரா, மெர்சல், ஸ்யே ரா நரசிம்ம ரெட்டி போன்ற பல இந்திய திரைப்படங்களிலும். மிஷன் இம்பாஸிபிள், ஆன்ட் மேன், ஸைரன் போன்ற பல ஹாலிவுட் படங்களிலும் விஷுவல் எஃபெக்ட்ஸ்ஸில் பணியாற்றியுள்ள iGene என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பள்ளி iGene School of VFX Technology என்பது குறிப்பிடத்தக்கது. 

அவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா?

Roto and Paint, Roto Paint and Comp, Matchmove, Effects, Digital Matte Paint, 3D Generalist மற்றும் 3D Animation ஆகிய 7 துறைகளில் முழுநேர சர்டிஃபைடு ப்ரொஃபெஷனல் (Certified Professional) கோர்ஸ்களை வழங்குகிறது iGene. முழுக்க முழுக்க செயல்முறை வகுப்புகள் நிறைந்த இந்த முழு நேர கோர்ஸின் காலம் 6 மாதங்கள். கோர்ஸ் முடிந்தபின், 3 மாதங்கள் iGene நடத்தும் லைவ் புராஜெக்ட் ஒன்றில் வேலை பார்க்கும் வாய்ப்பும் மாணவர்களுக்குக் கிடைக்கும். சர்வதேச தரத்திலான VFX நிபுணர்களை உருவாக்குவதே இந்த வகுப்புகளின் நோக்கம் என்பதால், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், ஒரு பேட்ச்சுக்கு 20 நபர்களுக்கு மட்டுமே அட்மிஷன் வாய்ப்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா?

VFX தான் வாழ்க்கை என இலட்சியம்கொண்ட மாணவர்களுக்கு இந்த கோர்ஸ் ஒரு வரப்பிரசாதமாகும். எந்த கோர்ஸில் சேருவது என்கிற குழப்பம் இருந்தால் iGene நடத்தும் கவுன்சலிங்கில் கலந்துகொண்டு மாணவர்கள் தெளிவடையலாம். 100% செயல்முறை வகுப்புகள் மூலம் VFX கலைத்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் iGene Certified Professional கோர்ஸில் சேர மற்றும் மேலும் விவரங்கள் அறிய, தொடர்புகொள்ளவும்: +91 75500 58889 | +91 75500 57776 | இ.மெயில்: contactus@igenevfxschool.com

www.igenevfxschool.com இணையதளத்தில் கோர்ஸ் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு